'டார்லிங்' இயக்குனருக்கு அடித்த அதிர்ஷ்டம்
Send us your feedback to audioarticles@vaarta.com
இளையதளபதி விஜய் நடித்த 'கத்தி' படத்தை தயாரித்த 'லைகா நிறுவனம்' சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் உருவாகவுள்ள 'எந்திரன் 2' படத்தை தயாரிக்கவுள்ள நிலையில், ஜி.வி.பிரகாஷின் அடுத்த படத்தையும் தயாரிக்க சமீபத்தில் அவருடன் ஒப்பந்தம் செய்தது என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்நிலையில் இந்த படத்தை இயக்கும் இயக்குனர் குறித்த தகவல்கள் வெளிவந்துள்ளது.
லைகா நிறுவனமும், ஜி.வி.பிரகாஷூம் இணையும் இந்த படத்தை சான் ஆண்டன் இயக்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இவர் ஏற்கனவே ஜி.வி.பிரகாஷ் அறிமுகமான 'டார்லிங்' படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
'டார்லிங்' படத்தின் வெற்றி காரணமாக அவருக்கு மீண்டும் வாய்ப்பு கிடைத்துள்ளதாகவும், ஆனால் இந்த படம் ரீமேக் படம் இல்லை என்றும் முழுக்க முழுக்க புதிய திரைக்கதையுடம் அமையும் படம் என்றும் கூறப்படுகிறது. இந்த படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு நடைபெற்று வருவதாகவும், ஜி.வி.பிரகாஷே இந்த படத்திற்கு இசையமைக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
விஜய், ரஜினி படங்களின் தயாரிப்பாளரின் படத்தை இயக்கவுள்ள இயக்குனர் சாம் ஆண்டனுக்கு அதிர்ஷ்டம் அடித்ததாகவே கோலிவுட்டில் கூறப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Contact at support@indiaglitz.com
Comments