'டார்லிங் 2' இசை வெளியீட்டு தேதி அறிவிப்பு

  • IndiaGlitz, [Sunday,January 31 2016]

பிரபல இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் வெளியான 'டார்லிங்' படம் சூப்பர் ஹிட் ஆனது என்பதை அனைவரும் அறிவோம். இந்நிலையில் தற்போது 'டார்லிங் 2' என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. 'மெட்ராஸ்' படத்தில் கார்த்தியின் நண்பனாக நடித்த கலையரசன் ஹீரோவாக நடித்து வரும் இந்த படத்தில் ரமேஷ் ராஜா, மாயா, காளி வெங்கட் உள்பட பலர் நடித்துள்ளனர்.


சதீஷ் சந்திரசேகரன் இயக்கியுள்ள இந்த படத்திற்கு ராதன் என்பவர் இசையமைத்துள்ளார். டார்லிங்' படத்தை தயாரித்த ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் இந்த படத்தை வெளியிட உள்ளது.

இந்நிலையில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் வரும் பிப்ரவரி 4ஆம் தேதி நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதை உறுதிப்படுத்தும் வகையில் இசை வெளியீட்டு தேதியுடன் கூடிய போஸ்டர் சற்று முன் இணையதளங்களில் வெளியாகியுள்ளது. இந்த படம் பிப்ரவரி இறுதியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.