டார்லிங் 2' ரிலீஸ் தேதி அறிவிப்பு

  • IndiaGlitz, [Wednesday,February 24 2016]

ஜி.வி.பிரகாஷ் ஹீரோவாக அறிமுகமான 'டார்லிங்' திரைப்படம் ரசிகர்களின் மாபெரும் வரவேற்பை பெற்ற நிலையில் அந்த படத்தை தயாரித்த ஸ்டுடியோக்ரீன் நிறுவனம் இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை தயாரித்து வந்தது.


'கபாலி' இயக்குனர் ரஞ்சித் இயக்கிய 'மெட்ராஸ்' படத்தில் முக்கிய வேடத்தில் நடித்த கலையரசன் ஹீரோவாக நடிக்கும் இந்த படத்தில் ரமேஷ்ராஜா, மாயா, காளிவெங்கட், உள்பட பலர் நடித்துள்ளனர்.

முதல்பாகம் போலவே திகில் மற்றும் சஸ்பென்ஸ் கலந்த இந்த படத்தை சதீஷ் சந்திரசேகரன் என்ற அறிமுக இயக்குனர் இயக்கியுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி தற்போது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படம் வரும் மார்ச் மாதம் 18ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது. ரிலீஸ் தேதியுடன் கூடிய போஸ்டரும் இன்று இணையதளத்தில் வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

தனுஷ்-அமலாபால் படப்பிடிப்பு முடிந்தது

கோலிவுட், பாலிவுட், ஹாலிவுட் என அனைத்து திரையுலகிலும் கலக்கி வரும் தனுஷ் நடிகராக மட்டுமின்றி தரமான படங்களை தயாரித்தும் வருகிறார்...

ரஜினி-கமலுடன் இணைந்த சசிகுமார்

தாரை தப்பட்டை படத்திற்கு பின்னர் குறுகிய காலத்தில் விறுவிறுப்பாக படப்பிடிப்பு முடிந்த சசிகுமார் திரைப்படம் 'வெற்றிவேல்'...

சென்னை கிரிக்கெட்டில் இணைந்தார் சன்னிலியோன்

பாலிவுட்டின் கவர்ச்சி நாயகி சன்னிலியோனின் ஃபேவரேட் விளையாட்டு கால்பந்து எனினும் அவர் தற்போது சென்னையை சேர்ந்த கிரிக்கெட் அணி ஒன்றின் உரிமையாளர் ஆகியுள்ளார்...

தேர்தல் கமிஷனுக்கு நடிகர் சங்கம் வைத்த கோரிக்கை மனு

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் உதவித்தலைவர் பொன்வண்ணன் தலைமையிலான குழு இன்று தமிழக தேர்தல் அதிகாரியை நேரில் சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை அளித்தது...

தனுஷ்-வெற்றிமாறனின் 'வடசென்னை' படப்பிடிப்பு தொடங்குவது எப்போது?

தனுஷ் நடித்து வரும் 'கொடி' படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில் இந்த படத்தை அடுத்து அவர் கவுதம்மேனனின் 'எனை நோக்கி பாயும் தோட்டா' என்ற படத்தில் நடிக்கவுள்ளதாக தனது சமூக வலைத்தளத்தில் உறுதிசெய்தார்...