கின்னஸ் முயற்சியில் பைக் சாகச வீரர் உயிரிழப்பு… வீடியோ வெளியிட்டு கதறும் நெட்டிசன்ஸ்!
Send us your feedback to audioarticles@vaarta.com
பைக் ரேஸில் கின்னஸ் சாதனை படைத்த அமெரிக்க சாகச வீரர் அலெக்ஸ் ஹார்வில் தனது சாதனையைத் தானே முறியடிக்க நினைத்து இருக்கிறார். இதற்காக தீவிர பைக் ரேஸ் பயிற்சியில் ஈடுபட்டபோது விபத்தில் சிக்கி உயிரிழந்து உள்ளார்.
இந்தச் சம்பவத்தை அடுத்து அவருடைய ரசிகர்கள் அலெக்ஸின் பழைய வீடியோக்களை வெளியிட்டு வருத்தம் தெரிவித்து வருகின்றனர். வாஷிங்டன் பகுதியில் உள்ள மோசஸ் ஏரி பகுதிக்கு அருகே அலெக்ஸ் (28) தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். அப்போது அவர் சென்ற பைக் மணல் குன்றில் மீது திடீரென மோதி ஹெல்மெட் தனியாகக் கழன்று விழுந்துள்ளது. இதனால் அலெக்ஸ் தூக்கி வீசப்படும் காட்சி தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி கடும் அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது.
விபத்தில் பலத்த காயம் அடைந்த அலெக்ஸ் அமெரிக்காவின் சமாரிட்டன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்பு சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. கின்னஸ் சாதனை புரிந்த சாகச வீரர் மீண்டும் சாதனை படைக்க எண்ணி அந்த முயற்சியில் உயிரிழந்து இருப்பது நெட்டிசன்களிடையே கடும் வருத்தத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இதனால் அவரது ரசிகர்கள் அலெக்ஸின் பழைய வீடியோக்களை வெளியிட்டு வைரலாக்கி வருவதும் குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com