close
Choose your channels

கவுதம் மேனனின் 'தோட்டா' ரகசியம் இதுதான்

Tuesday, January 3, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல இயக்குனர் கவுதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் 'எனை நோக்கி பாயும் தோட்டா' படத்தின் படபிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. இந்நிலையில் சமீபத்தில் இந்த படத்தின் டீசர் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது.
ஆனால் இந்த டீசரில் இந்த படத்தின் இசையமைப்பாளர் யார்? என்ற தகவல் இல்லை. ஏ.ஆர்.ரஹ்மான், ஹாரீஸ் ஜெயராஜ் என ரசிகர்கள் ஊகம் செய்து கொண்டிருந்த நிலையில் இந்த படத்தின் இசையமைப்பாளர் பெயரை இந்த படத்தின் ஆடியோ வெளியீட்டில் வெளியிட கவுதம் மேனன் திட்டமிட்டிருந்தார்.
ஆனால் தற்போது இந்த படத்தின் இசையமைப்பாளரின் ரகசியம் வெளிவந்துள்ளது. சசிகுமாரின் 'கிடாரி', 'பலே வெள்ளைத்தேவா' போன்ற படங்களுக்கு இசையமைத்த தர்புகா சிவா தான் இந்த படத்தின் இசையமைப்பாளர் என்ற தகவல் வெளிவந்துள்ளது. இந்த தகவல் தனுஷ் ரசிகர்களுக்கு மட்டுமின்றி அனைவருக்கும் ஆச்சரியத்தை அளித்துள்ளது.
தனுஷ், மேக்னா ஆகாஷ், ராணா உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு டி.ஜான் ஒளிப்பதிவும், அந்தோணி படத்தொகுப்பும் செய்து வருகின்றனர். ஒன்றாக எண்டர்டெயின்மெண்ட் மற்றும் எஸ்கேப் ஆர்ட்டிஸ் நிறுவனங்கள் இணைந்து இந்த படத்தை தயாரிக்கின்றன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment