'தர்பார்' படத்திற்காக அனிருத்தின் சரவெடி

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள ’தர்பார்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா அடுத்த மாதம் நடைபெற உள்ள நிலையில் இம்மாதம் இந்த படத்தின் இரண்டு சிங்கிள் பாடல்கள் வெளியாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இந்த நிலையில் சற்று முன் இசையமைப்பாளர் அனிருத் அவர்கள் தனது சமூக வலைதளப் பக்கத்தில் ’தர்பார்’ படத்தின் சரவெடி பாடலொன்று லோடிங் ஆகிக் கொண்டு இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். இதனையடுத்து இந்த பாடல் சிங்கிள் பாடலாக இன்னும் ஓரிரு நாளில் வெளியாகும் என்றும் இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது அனிருத் பதிவு செய்த இந்த ட்விட்டுக்கு லைக்ஸ்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ரஜினிகாந்த், நயன்தாரா, பிரகாஷ்ராஜ், நிவேதா தாமஸ், பிரதீக் பாபர், தலிப் தாஹில், யோகிபாபு, ஹரிஷ் உத்தமன், மனோபாலா, சுமன், ஆனந்த்ராஜ், ஸ்ரீமான் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவும், ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு பணியும் செய்துள்ளனர். லைகா நிறுவனம் தயாரித்திருக்கும் இந்த படம் வரும் 2020ஆம் ஆண்டு பொங்கல் விருந்தாக வெளியாகவுள்ளது.