'தர்பார்' படத்தில் ரஜினி சொன்ன கரெக்சன்: மீண்டும் படப்பிடிப்பா?

  • IndiaGlitz, [Sunday,December 15 2019]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’தர்பார்’ படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் முடிவடைந்து தற்போது இந்த படத்தின் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் இரவு பகலாக நடைபெற்று வருகின்றன. இந்த படம் வரும் ஜனவரி 10ம் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் ரிலீசுக்கு இன்னும் ஒரு மாதம் கூட இல்லை என்பதால் போஸ்ட் புரடொக்ஷன் பணிகளை விறுவிறுப்பாக படக்குழுவினர் கவனித்து வருகின்றனர்.

இந்த நிலையில் இந்த படத்தை சமீபத்தில் பார்த்த ரஜினிகாந்த் இரண்டாம் பாதியில் ஒரு இடத்தில் ஒரு பாடல் இருந்தால் நன்றாக இருக்கும் என்று கருத்து கூறியதாகவும் அதனை ஏற்றுக்கொண்ட ஏஆர் முருகதாஸ் அந்த பாடலின் படப்பிடிப்பை நேற்று முதல் நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த பாடல் காட்சியின் படப்பிடிப்பு காரணமாக ’தலைவர் 168’ படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்குவதாக இருந்த நிலையில் ஓரிரு நாட்கள் தள்ளிப் போகும் என்றும் கூறப்படுகிறது.

அரசியல் கட்சி ஆரம்பிப்பதற்கு முன்னதாக வெளிவரும் படம் ’தர்பார்’ என்பதால், இந்த படம் மிகப்பெரிய வெற்றியை பெற வேண்டும் என்ற நோக்கத்தில் ரஜினிகாந்த் இந்த படத்தின் மீது மிகுந்த அக்கறை செலுத்தி வருவதாக கூறப்படுகிறது.

ரஜினிகந்த், நயன்தாரா, சுனில் ஷெட்டி, நிவேதா தாமஸ், யோகிபாபு, தம்பி ராமையா, ஸ்ரீமான், உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் லைகாவின் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவும், ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு பணியும் செய்துள்ளனர்.

More News

ஷிமோகாவில் ரசிகர்களுக்காக நேரம் ஒதுக்கிய தளபதி விஜய்!

தளபதி விஜய் நடித்து வரும் 'தளபதி 64' படத்தின் படப்பிடிப்பு கர்நாடக மாநிலத்தில் உள்ள ஷிமோகா சிறைச்சாலையில் தற்போது நடைபெற்று வருவது தெரிந்ததே.

அதிரடி ஆக்சன் கேரக்டரில் 'பிக்பாஸ் 3' நடிகை

கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் 3' நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் சிலர் திரையுலக வாய்ப்பை பெற்று வந்த நிலையில்

சிவகார்த்திகேயனின் 'ஹீரோ' படத்தின் மலைக்க வைக்கும் ரன்னிங் டைம்!

ஒரு காலத்தில் தமிழ் திரைப்படங்கள் மூன்று மணி நேரத்திற்கு குறையாமல் வெளிவந்து கொண்டிருந்தன. ஐந்து பாடல்கள், காமெடிக்கு என தனி டிராக் இல்லாத படங்களே இல்லை

மருந்துகளின் விலையை 50 சதவீதம் வரை உயர்த்திக் கொள்ளலாம்..! தேசிய மருந்து பொருள் விலை நிர்ணய ஆணையம் அனுமதி.

பெருமளவில் பயன்படுத்தப்படும் ஆன்டிபயாட்டிக் உள்ளிட்ட அத்தியாவசிய மருந்துகளின் விலையை உயர்த்திக் கொள்ள, தேசிய மருந்துப் பொருள் விலை நிர்ணய ஆணையம் அனுமதி அளித்துள்ளது

எங்க ஊரையே காணும் சார்..! ராமநாதபுரத்தில் காணாமல் போன ஒரு கிராமம்.

சிட்டிசன் திரைப்படத்தில் வரும் அத்திப்பட்டி கிராமத்தைப் போல ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே ஒரு கிராமத்தையே வாக்காளர் பட்டியலில் காணவில்லை என அக்கிராம மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.