'தர்பார்' படத்தையும் கைப்பற்றிய சன் டிவி

  • IndiaGlitz, [Tuesday,December 17 2019]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 166வது படமான ‘பேட்ட’ திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்தது என்பதும், இதனை அடுத்து ரஜினி நடிக்க உள்ள ’தலைவர் 168’ என்ற படத்தையும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது என்பதும் தெரிந்ததே

இந்த நிலையில் லைக்கா நிறுவனம் தயாரிப்பில் ரஜினியின் 167வது படமாக உருவாகியிருக்கும் ‘தர்பார்’ படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்து வரும் பொங்கல் தினத்தில் வெளியாக உள்ளது. இந்த நிலையில் தர்பார்’ படத்தின் புரமோஷன் மற்றும் வியாபாரம் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் சேட்டிலைட் உரிமையை சன் டிவி நிறுவனம் பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது

இதனை அடுத்து ரஜினியின் அடுத்தடுத்த மூன்று படங்கள் சன் குழுமத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. சேட்டிலைட் உரிமையை அடுத்து, இந்த படத்தின் அடுத்தகட்ட வியாபாரங்கள் தொடங்கி இருப்பதாகவும் இது குறித்த தகவல்கள் அவ்வப்போது வெளிவர வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது

ரஜினிகாந்த், நயன்தாரா, சுனில் ஷெட்டி, நிவேதா தாமஸ், யோகிபாபு, தம்பி ராமையா, ஸ்ரீமான், உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவும், ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு பணியும் செய்துள்ளனர்.