ரசிகர்களுக்கு 'தர்பார்' படக்குழுவினர் கொடுத்த தீபாவளி கிஃப்ட்
Send us your feedback to audioarticles@vaarta.com
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் அனிருத் இசையில் லைக்கா நிறுவனத்தின் பிரமாண்டமான தயாரிப்பில் உருவாகி வரும் ‘தர்பார்’ படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது. இந்த படத்தின் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் இந்த படத்தின் அட்டகாசமான போஸ்டர் ஒன்றை சற்றுமுன் வெளியாகியுள்ளது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அட்டகாசமாக கையில் துப்பாக்கி வைத்துள்ள இந்த போஸ்டர் இணையதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த போஸ்டர் நிச்சயம் ரஜினி ரசிகர்களுக்கு தீபாவளி கி கிஃப்ட் என்பதில் சந்தேகமில்லை.
ரஜினிகாந்த், நயன்தாரா, பிரகாஷ்ராஜ், நிவேதா தாமஸ், பிரதீக் பாபர், தலிப் தாஹில், யோகிபாபு, ஹரிஷ் உத்தமன், மனோபாலா, சுமன், ஆனந்த்ராஜ், ஸ்ரீமான் உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்திற்கு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவும், ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு பணியும் செய்து வருகின்றனர். இந்த படம் 2020ஆம் ஆண்டு பொங்கல் தினத்தில் வெளியாகவுள்ளது.
Happy Deepavali ??@rajinikanth @ARMurugadoss @santoshsivan @anirudhofficial @sreekar_prasad #Darbar #darbarpongal pic.twitter.com/d7EKDVGURP
— Lyca Productions (@LycaProductions) October 26, 2019
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments