மைதானத்தின் நடுவே பெண் வர்ணனையாளரை அலேக்காக தூக்கிய நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
மைதானத்தின் நடுவே நிகழ்ச்சியின் நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஒருவர் பெண் வர்ணனையாளருடன் பேசிக் கொண்டிருந்த போது திடீரென அவரை அலேக்காக தூக்கிய வீடியோ இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
2023 ஆம் ஆண்டின் பாகிஸ்தான் பிரிமியர் லீக் போட்டிகள் தற்போது நடைபெற்று வரும் நிலையில் சமீபத்தில் நடந்த லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கிளாடியேட்டர் அணி 179 ரன்கள் எடுத்தது. இதனை அடுத்து களம் இறங்கிய இஸ்லாமாபாத் அணி மூன்று பந்துகள் மீதம் இருக்கும் நிலையில் த்ரில் வெற்றி பெற்றது.
இந்த நிலையில் இந்த போட்டியில் முன்னாள் நியூசிலாந்து வேகப்பந்து வீரரின் செயல் ரசிகர்களை வியப்படைய செய்தது. இந்த போட்டிக்கு முன்பு வர்ணனையாளர் எரின் ஹாலண்ட் உடன் டேனி மோரிசன் பேசி கொண்டிருக்கும்போது திடீரென அவரை அலேக்காக தூக்கிக் கொண்டு சுற்றினார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை எரின் ஹாலண்ட் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்து ‘லவ் யூ அங்கிள்’ என்று கூறியுள்ளார்.
57 வயதாகும் டேனி மோரிசன் நியூசிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளராக இருந்தவர் என்பதும், தற்போது அவர் கிரிக்கெட் தொகுப்பாளராக பணிபுரிந்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Love ya uncle @SteelyDan66 😂 @thePSLt20 pic.twitter.com/9reSq6ekdN
— Erin Holland (@erinvholland) March 5, 2023
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com