ஜேம்ஸ்பாண்ட் படத்தில் இருந்து திடீரென விலகிய ஆஸ்கார் விருது பெற்ற இயக்குனர்
Send us your feedback to audioarticles@vaarta.com
உலகம் முழுவதும் பெரும் வரவேற்பையும் வசூலையும் பெற்று வரும் படங்களில் ஜேம்ஸ்பாண்ட் படங்களும் உண்டு. இந்த நிலையில் 25வது ஜேம்ஸ்பாண்ட் படத்தை ஆஸ்கார் விருது பெற்றவரும் 'ஸ்லம்டாக் மில்லியனர்' பட இயக்குனருமான டேனி போய்லே இயக்குவதாக இருந்தது. டேனிகிரேக் ஜேம்ஸ்பாண்ட் வேடத்தில் நடிக்கவிருந்த இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் கடந்த சில மாதங்களாக விறுவிறுப்புடன் நடந்தது
இந்த நிலையில் இந்த படத்தின் இயக்குனருக்கும் தயாரிப்பாளர்களுக்கும் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக இயக்குனர் டேனி போய்லே இந்த படத்தில் இருந்து விலகிவிட்டதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இந்த தகவலை ஜேம்ஸ்பாண்ட் டுவிட்டர் பக்கத்திலும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
25வது ஜேம்ஸ்பாண்ட் படத்தை வரும் 2019ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ரிலீஸ் செய்ய தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டிருந்தது. ஆனால் தற்போது இயக்குனர் டேனி போய்லே திடீரென இந்த படத்தில் இருந்து விலகிவிட்டதால் இந்த படம் திட்டமிட்ட தேதியில் ரிலீஸ் ஆகுமா? என்ற கேள்விக்குறி எழுந்துள்ளது
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments