பிக்பாஸ் டேனியல் திடீர் திருமணம்
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து நேற்று வெளியேறிய டேனியல் நேற்று திடீரென திருமணம் செய்து கொண்டதாக சமூக வலைத்தளத்தில் புகைப்படத்துடன் கூடிய ஒரு பதிவை பதிவு செய்துள்ளார்.
நேற்றைய தினம் வெளியேறியபோது கமல்ஹாசனிடம் முதல் வேளையாக திருமணம் தான் என்று கூறினால் கமல் உள்பட அனைவரையும் அழைத்து திருமணம் செய்யவுள்ளதாகவும், தனது திருமணத்தை கமல்ஹாசன் தான் முன்னின்று நடத்த வேண்டும் என்று கூறினார்.
இந்த நிலையில் தன்னுடைய நீண்டநாள் காதலி டெனிஷா அவர்களை ஒருசில காரணங்களுக்காக உடனடியாக பதிவுத்திருமணம் செய்து கொண்டதாகவும், சில குடும்ப பிரச்சனைகளால் உடனடியாக அனைவருக்கும் இந்த திருமணம் குறித்த தகவல் தெரிவிக்க முடியாமல் போனதற்கு வருந்துவதாகவும் இருப்பினும் தாங்கள் தொடங்கவுள்ள இந்த இல்லற வாழ்விற்கு அனைவரது ஆசியும் கிடைக்கும் என தான் நம்புவதாகவும் அவர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் கூறியுள்ளார். பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய மறுதினமே நடந்த டேனியலின் இந்த திடீர் திருமணம் அனைவருக்கும் ஆச்சரியத்தை அளித்துள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout