close
Choose your channels

உதயநிதியின் அடுத்த படத்தில் 'பைரவா' வில்லன்

Tuesday, September 20, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிப்பில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் புதிய படத்தின் பூஜை நேற்று நடந்த நிலையில் 'தூங்கா நகரம்' கவுரவ் இயக்கும் படம் ஒன்றிலும் அவர் நடிக்கவுள்ளார் என்பது தெரிந்ததே.
உதயநிதி, மஞ்சிமா மோகன் நடிக்கும் இந்த படத்தில் வில்லனாக நடிக்க டேனியல் பாலாஜி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். சமீபத்தில் இளையதளபதி விஜய்யின் 'பைரவா' படத்தின் படப்பிடிப்பை முடித்த டேனியல் இம்மாத இறுதியில் உதயநிதி படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
'தூங்கா நகரம்' போலவே த்ரில் படமாக உருவாகவுள்ள இந்த படத்தில் டேனியல் பாலாஜியின் கேரக்டர் மிகவும் முக்கியமானது என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இந்த படத்திற்கு அரவிந்த் சிங் ஒளிப்பதிவாளராக பணியாற்றி வருகிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment