உதயநிதியின் அடுத்த படத்தில் 'பைரவா' வில்லன்

  • IndiaGlitz, [Tuesday,September 20 2016]

ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிப்பில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் புதிய படத்தின் பூஜை நேற்று நடந்த நிலையில் 'தூங்கா நகரம்' கவுரவ் இயக்கும் படம் ஒன்றிலும் அவர் நடிக்கவுள்ளார் என்பது தெரிந்ததே.
உதயநிதி, மஞ்சிமா மோகன் நடிக்கும் இந்த படத்தில் வில்லனாக நடிக்க டேனியல் பாலாஜி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். சமீபத்தில் இளையதளபதி விஜய்யின் 'பைரவா' படத்தின் படப்பிடிப்பை முடித்த டேனியல் இம்மாத இறுதியில் உதயநிதி படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
'தூங்கா நகரம்' போலவே த்ரில் படமாக உருவாகவுள்ள இந்த படத்தில் டேனியல் பாலாஜியின் கேரக்டர் மிகவும் முக்கியமானது என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இந்த படத்திற்கு அரவிந்த் சிங் ஒளிப்பதிவாளராக பணியாற்றி வருகிறார்.

More News

'ஆண்டவன் கட்டளை' சென்சார் விபரங்கள்

விஜய்சேதுபதி நடித்த 'தர்மதுரை' 'U'சர்டிபிகேட் பெற்று சமீபத்தில் வெளியாகி மாபெரும் வரவேற்பை ரசிகர்களிடமும் ஊடகங்களிலும்...

சூர்யாவின் 'எஸ் 3' படத்தின் அதிகாரபூர்வ ரிலீஸ் தேதி

சூர்யாவின் சிங்கம் 3' திரைப்படம் இன்று மாலை வெளியாகவுள்ளதாக வந்த செய்தியினை காலையில் பார்த்தோம்...

பிரபுதேவா-தமன்னாவின் 'தேவி' ரிலீஸ் தேதி அறிவிப்பு

தமிழில் நடன இயக்குனராகவும் நடிகராகவும் இருந்த பிரபுதேவா அதன் பின்னர் தமிழ், தெலுங்கு மற்றும் பாலிவுட் படங்களை இயக்கி முன்னணி இயக்குனர்கள் வரிசையில் இணைந்தார்...

கேரளாவில் அசைக்க முடியாத நம்பர் ஒன் இடத்தில் விஜய்

இளையதளபதி விஜய்க்கு தமிழகத்தை போலவே கேரளாவிலும் பெருமளவில் ரசிகர்கள் உள்ளனர் என்பதும் ஒரிஜினல் மலையாள படங்களையே...

தென்னாப்பிரிக்காவில் டூயட் பாடும் விஜய்சேதுபதி

கோலிவுட் திரையுலகில் பிசியான ஹீரோக்களில் ஒருவரான விஜய்சேதுபதியின் 'தர்மதுரை' சமீபத்தில் வெளியாகி வெற்றி பெற்ற நிலையில் அவர் நடித்து முடித்துள்ள 'ஆண்டவன் கட்டளை' மற்றும் 'றெக்க'...