எனக்கு வாய்த்த 2 பலிகடா ஐஸ்வர்யா, யாஷிகா: டேனியல்
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக்பாஸ் வீட்டில் இருந்து நேற்று வெளியேறிய டேனியல் இதுவரை இல்லாத வகையில் கலகலப்பூட்டும் வகையில் கமல் முன் பேசி சென்றார். பொதுவாக வீட்டை விட்டு வெளியேறும் போட்டியாளர்கள் வெளியே சிரித்த முகத்துடன் இருந்தாலும் உள்ளுக்குள் கவலையுடன் இருந்ததை பார்த்தோம். ஆனால் நேற்று டேனியல் வெளியே வந்தபோது ஆடியன்ஸ்களுடனும், கமல்ஹாசனுடனும் ஜாலியாக பேசினார்.
பிக்பாஸ் வீட்டிற்குள் இருந்தபோது ஐஸ்வர்யா மற்றும் யாஷிகா ஆகிய இருவரையும் டாஸ்க்கின்போது தான் பலிகடாவாக பயன்படுத்தி கொண்டதாகவும் கூறினார். மேலும் தான் வெளியேறும்போது ஒருவர் கண்களில் கூட கண்ணீர் வரவில்லை என்றும் எதற்கெடுத்தாலும் கண்ணீர் விடும் மும்தாஜ் கூட கண்ணீர் விடாமல் தனக்கு அறிவுரை மட்டுமே கூறியதாகவும் டேனியல் ஆதங்கத்துடன் கூறினார்.
மேலும் தனது சக போட்டியாளர்களுக்கு விடைபெறும் முன் அவர் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பட்டங்களை கொடுத்துவிட்டு சென்றார். பாலாஜிக்கு 'கப்சா', ஜனனிக்கு 'போங்கு', செண்ட்ராயனுக்கு 'உஷார் பக்கிரி, 'யாஷிகாவுக்கு 'அராத்து', 'ஐஸ்வர்யாவுக்கு 'அல்லக்கை', 'மும்தாஜூக்கு 'டுபாக்கூர்', ரித்விகாவுக்கு 'பேஜார்' ஆகிய பட்டங்களையும் டேனிய்டல் அளித்தார். மொத்தத்தில் டேனியல் வெளியேறும் தினத்தில் அனைவரையும் கலகலப்பாக்கிவிட்டு சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout