close
Choose your channels

தனுஷின் 'வடசென்னை'யில் விஜய் பட வில்லன்

Saturday, June 18, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இளையதளபதி விஜய் நடிக்கும் 'விஜய் 60' படத்தில் வில்லன்களில் ஒருவராக நடித்து வரும் டேனியல் பாலாஜி, பத்து வருடங்களுக்கு பின்னர் விஜய்யை மீண்டும் சந்தித்ததாகவும், பத்து வருடங்களுக்கு பின்பும் அதே பாசத்துடன் தன்னை வரவேற்றதாகவும் சமூக வலைத்தளத்தில் கூறியிருந்ததை சில நாட்களுக்கு முன் பார்த்தோம்.
இந்நிலையில் பத்து வருடங்களுக்கு பின் விஜய்யுடன் இணைந்த டேனியல் பாலாஜி தற்போது ஒன்பது வருடங்களுக்கு பின்னர் தனுஷூடன் மீண்டும் ஒரு படத்தில் இணைந்து நடிக்கவுள்ளார்.
கடந்த 2007ஆம் ஆண்டு தனுஷ் - வெற்றிமாறன் இணைந்த 'பொல்லாதவன்' படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்த டேனியல் பாலாஜி மீண்டும் ஒன்பது வருடங்களுக்கு பின்னர் தற்போது தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கவுள்ள 'வடசென்னை' படத்தில் வில்லனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். தற்போது ஐதராபாத்தில் 'விஜய் 60' படப்பிடிப்பில் இருக்கும் டேனியல் பாலாஜி விரைவில் 'வடசென்னை' படத்தின் படப்பிடிப்பில் இணையவுள்ளதாக கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment