10 வருடங்களுக்கு பின்பும் மாறாத பாசம். விஜய்யை பாராட்டிய பிரபல வில்லன்
Send us your feedback to audioarticles@vaarta.com
இளையதளபதி விஜய் நடித்து வரும் 'விஜய் 60' படத்தின் ஐதராபாத் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருவது குறித்து ஏற்கனவே பார்த்தோம். பரதன் இயக்கி வரும் இந்த படத்தின் மெயின் வில்லனாக 'லிங்கா' புகழ் ஜெகபதிபாபு நடித்து வரும் நிலையில் இன்னொரு வில்லனாக டேனியல் பாலாஜி நடிக்கின்றார் என்ற செய்தி அனைவரும் அறிந்ததே.
இந்நிலையில் இன்று முதல் டேனியல் பாலாஜி சம்பந்தப்பட்ட காட்சி படமாக்கப்படுவதால் அவர் இன்று விஜய்யுடன் படப்பிடிப்பில் கலந்து கொண்டார். விஜய்யை பத்து வருடங்களுக்கு பின்னர் டேனியல் பாலாஜி தற்போது தான் மீண்டும் சந்திப்பதாகவும், பத்து வருடங்களுக்கு முன்னர் அவர் தன் மேல் காட்டிய அதே பாசம் இப்போதும் சற்றும் குறையவில்லை என்றும் அவர் நெகிழ்ச்சியுடன் தன்னுடைய சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.
விஜய், கீர்த்தி சுரேஷ் முக்கிய கேரக்டர்களில் நடித்து வரும் இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வருகிறார். விஜயா புரடொக்ஷன்ஸ் நிறுவனம் பிரமாண்டமாக தயாரிக்கும் இந்த படத்தை 'அழகிய தமிழ்மகன்' பரதன் இயக்கி வருகிறார். இந்தப் படம் வரும் தீபாவளிக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments