எப்படி விஜய்யால் மட்டும் முடிகிறது. ஆச்சரியப்பட்ட 'பைரவா' வில்லன்

  • IndiaGlitz, [Friday,September 30 2016]

பொல்லாதவன், வேட்டையாடு விளையாடு உள்பட பல படங்களில் வில்லன் நடிப்பில் ரசிகர்களின் மனங்களை கவர்ந்த நடிகர் டேனியல் பாலாஜி தற்போது இளையதளபதி விஜய் நடித்து வரும் 'பைரவா' படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் மெயின் வில்லனான ஜெகபதிபாபுவுக்கு அடியாளாக நடித்து வரும் டேனியல், சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் விஜய்யுடன் பணிபுரிந்த அனுபவம் குறித்து கூறியுள்ளார்.
'பைரவா' படத்தின் படப்பிடிப்பின் போது விஜய், படகுழுவினர் அனைவரையும் தனித்தனியாக உற்சாகப்படுத்தியது பெரும் வியப்பை தந்தது. எப்படி இவரால் மட்டும் இது சாத்தியமாகிறது என்று ஆச்சரியப்பட்டேன். சக நடிகர்களிடம் விஜய் காட்டும் அக்கறை ஒவ்வொரு நடிகரும் கடைபிடிக்க வேண்டிய ஒன்று.
'பைரவா' படத்தில் எனக்கு இன்னும் மூன்று காட்சிகளில் மட்டுமே நடிக்க வேண்டியதுள்ளது. அவற்றில் ஒன்று விஜய்யுடன், இன்னொன்று ஜெகபதிபாபுவுடன். நான் இந்த படத்தில் தாடியுடன் தோன்றுகிறேன்' என்று டேனியல் பாலாஜி தனது கேரக்டர் குறித்து கூறியுள்ளார்.