இந்த ஏரியின் அருகே ஒரு மணி நேரம் நின்றாலே மரணம் நிச்சயம்!
- IndiaGlitz, [Saturday,April 20 2019]
இயற்கை மனிதர்களை பல்வேறு வகையில் பாதுகாத்து வந்தாலும், மனிதர்கள் செய்யும் தவறுகளால், விஷய தன்மை கொண்டதாக மாறி, உயிருக்கே ஆபத்தை விளைவிக்கிறது. அப்படித்தான் முற்றிலும் விஷமாக மாறி உள்ளது ஒரு ஏரி.
மத்திய ரஷ்யாவின் தெற்கு யூரல் மலையில், அமைந்துள்ளது அழகும் விஷத்தன்மையும் கொண்ட கரசோ ஏரி விஷத்தன்மை கொண்டதாக மாறியதற்கு முழு காரணமும், இயற்கைக்கு மனிதன் செய்த துரோகம் தான்.
நீர் ஆதாரத்திற்காக பயன்படக்கூடிய ஏரியை, குப்பை கொட்டும் தொட்டியாக மாற்றி கழிவுகளை ஏற்றி, அதன் தன்மையை மாற்றி தற்போது விஷமாய் மாறிக் காட்சி அளிக்கிறது இந்த ஏரி.
1951 ஆம் ஆண்டு, முதல் சோவியத் ஒன்றியத்தால் அணுசக்தி கழிவுகளை கொட்டும் இடமாக இந்த ஏரி பயன்படுத்தப்பட்டுள்ளது. அசாதாரணமான அளவு அணுசக்தி, கழிவுகளை இந்த ஏரியில் கொட்டியதன் விளைவாக இன்று மனிதர்கள் இந்த ஏரியின் பக்கம் சென்றாலே உயிருக்கு ஆபத்து ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.
மேலும் 1957 ஆம் ஆண்டு, இந்த ஏரியின் அருகே அமைந்திருந்த அணுசக்தி ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டது. இந்த வெடி விபத்து காரணமாக ஏராளமான கதிரியக்க துகள்கள் ஏரியில் கலந்தது. இதனால் ஏரியில் உள்ள நீர் கதிரியக்கம் கொண்டதாக மாறியது.
இதனால் இந்த ஏரியின் அருகே ஒரு மணி நேரம் நின்றாலே மனிதர்களின் உயிர் போகும் அளவிற்கு விஷத் தன்மை கொண்டதாக மாறி உள்ளது. இந்த ஏரிக்கு செல்வதற்கு அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.