கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட 16 பேர் அடுத்தடுத்து மரணம்? அதிர்ச்சி தகவல்!
Send us your feedback to audioarticles@vaarta.com
சுவிட்சர்லாந்தில் ஃபைசர்-பயோன் டெக் மருந்து நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட கொரோனா தடுப்பூசியும் அமெரிக்காவின் மாடர்னா தடுப்பூசியும் தற்போது பொது மக்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன. அந்த தடுப்பூசி மருந்தை செலுத்திக் கொண்ட 16 பேர் கடந்த சில தினங்களில் அடுத்தடுத்து உயிரிழந்து உள்ளதாக அந்நாட்டின் சுகாதாரக் குழு தகவல் வெளியிட்டு உள்ளது. இந்தத் தகவலால் உலக நாடுகள் முழுக்க கடும் பரபரப்பு ஏற்பட்டு இருக்கிறது.
கொரோனா தடுப்பூசிகளை தற்போது பெரும்பாலான உலக நாடுகள் பயன்படுத்தத் தொடங்கி விட்டன. இதனால் கொரோனா பீதியில் இருந்து பொதுமக்கள் ஓரளவு விடுப்பட்டு வருவதையும் பார்க்க முடிகிறது. இந்நிலையில் சுவிட்சர்லாந்தில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட 16 பேர் அடுத்தடுத்து உயிரிழந்து இருப்பது கடும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும் உயிரிழந்தவர்கள் அனைவரும் 86 வயதைத் தாண்டியவர்கள் என்றும் அவர்களுக்கு ஏற்கனவே நீரிழிவு போன்ற வேறுநோய் பாதிப்புகள் இருந்ததாகவும் கூறப்படுகிறது.
முன்னதாக கொரோனா தடுப்பூசி பயன்பாட்டுக்கு வந்தபோது அதனால் சில பக்கவிளைவுகள் ஏற்படுகிறது என்ற தகவலை ஊடகங்கள் வெளியிட்டு வந்தன. இதில் பெரும்பாலும் மரணங்கள் இல்லாத நிலையில் தற்போது மாடர்னா மற்றும் ஃபைசர் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட 16 பேர் உயிரிழந்து இருப்பது பெரும் சிக்கலை உருவாக்கி உள்ளது. மேலும் அந்நாட்டில் தடுப்பூசி செலுத்திக் கொண்ட 364 பேருக்கு பக்கவிளைவுகள் ஏற்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது. இவர்களில் 199 பேர் ஃபைசர் தடுப்பூசியும் மற்ற 154 பேர் மாடர்னா தடுப்பூசியும் செலுத்திக் கொண்டவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதுவரை உலகம் முழுக்க கொரோனா வைரஸால் 11 கோடியே 46 லட்சத்திற்கும் மேல் மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் உயிரிழப்பு 25 லட்சத்து 43 ஆயிரத்தை தாண்டி இருக்கிறது. இந்நிலையில் சுவிட்சர்லாந்தில் மட்டும் கொரோனா வைரஸ் பாதிப்பு 55 லட்சத்தை தாண்டி, உயிரிழப்பு 10 ஆயிரத்தை எட்டி இருக்கிறது. தற்போது கொரோனா தடுப்பூசி செலுத்தும் நடைமுறை அந்நாட்டில் தீவிரப்படுத்தப் பட்டுள்ள நிலையில் தடுப்பூசி செலுத்திக் கொண்ட 16 பேர் உயிரிழந்து உள்ளனர். இதனால் அந்நாட்டு மக்களிடையே சிறு பதற்றம் ஏற்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout