விமானத்தில் பாலியல் தொல்லைக்கு ஆளான பிரபல நடிகை
Send us your feedback to audioarticles@vaarta.com
இந்தியாவின் மிக அதிக வசூலை செய்த திரைப்படம் என்ற பெருமையை பெற்ற அமீர்கானின் 'தங்கல்' படத்தில் அவருடைய மகளாக நடித்திருந்த நடிகை ஜைரா வாசிம். இவர் சமீபத்தில் டெல்லியில் இருந்து மும்பைக்கு விமான பயணம் செய்து கொண்டிருந்தபோது இவருக்கு பின்புறம் உட்கார்ந்திருந்த நடுத்தர வயதை சேர்ந்த ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்ததாக கண்ணீருடன் தனது சமூக வலைத்தள பக்கத்தில் புகார் கூறியுள்ளார்
விமானத்தில் தனக்கு பின்னாள் உட்கார்ந்திருந்த அந்த நபர் தனது காலால் தனக்கு தொல்லை கொடுத்து கொண்டிருந்ததாகவும், தனக்கு உதவி செய்ய அந்த விமானத்தில் யாரும் வரவில்லை என்றும் கண்ணீருடன் ஒரு வீடியோவை பதிவு செய்துள்ளார். இந்த வீடியோ இணையதளங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜைரா வாசிம் பதிவு செய்த இந்த பதிவுக்கு பதிலளித்துள்ள அந்த விமான நிறுவனம், ஜைராவாசிமின் புகார் குறித்து நாங்கள் விசாரணை செய்யவுள்ளோம். கண்டிப்பாக இந்த விஷயத்தில் அவருக்கு நாங்கள் உறுதுணையாக இருப்போம்' என்று கூறியுள்ளனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Contact at support@indiaglitz.com
Comments