என் கணவர் தற்கொலை செய்து கொள்ள வாய்ப்பே இல்லை.. டான்சர் ரமேஷ் மனைவி  திடுக் தகவல்

  • IndiaGlitz, [Saturday,January 28 2023]

டிக்டாக் மூலம் பிரபலமாகி சினிமாவிலும் நடித்து வந்த டான்சர் ரமேஷ் திடீரென நேற்று பத்தாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாக வெளியானது. இந்த நிலையில் டான்சர் ரமேஷ் முதல் மனைவி அவர் தற்கொலை செய்து கொள்ள வாய்ப்பே இல்லை என்று கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

டிக் டாக் மூலம் பிரபலமாகி அதன் பிறகு ’துணிவு, ஜெயிலர்’ உள்பட ஒரு சில படங்களில் நடித்தவர் டான்சர் ரமேஷ். இவரது வீடியோ டிக்டாக் மற்றும் இன்ஸ்டாகிராமில் வைரலானதை அடுத்து அவருக்கு சினிமா வாய்ப்புகளும் கிடைத்தன.

இந்த நிலையில் தான் டான்சர் ரமேஷுக்கு சித்ரா, இன்பவள்ளி ஆகிய இரண்டு மனைவிகள் இருந்த நிலையில் நேற்று தனது பிறந்தநாளின் போது திடீரென அவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்டது. இது குறித்து அவரது இரண்டாவது மனைவியிடம் போலீசார் விசாரணை செய்தபோது, ‘தன்னிடம் நண்பர்களுக்கு பார்ட்டி வைக்க தனது கணவர் பணம் கேட்டதாகவும் ஆனால் பணம் தரவில்லை என்றும் அதனால் விரக்தி அடைந்ததால் பத்தாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாகவும் கூறியதாக செய்திகள் வெளியானது.

இந்த நிலையில் டான்சர் ரமேஷின் முதல் மனைவி சித்ரா இது குறித்து கூறிய போது, ‘எனது கணவர் தற்கொலை செய்து கொள்ள வாய்ப்பே இல்லை, சாதாரண காய்ச்சல் என்றால் கூட நான் செத்து விடுவேன் என்று பயப்படுவார், அவருக்கு மரண பயம் அதிகம், எனவே தற்கொலை செய்வதற்கு அவருக்கு எந்த துணிச்சலும் இல்லை, அவரது மரணத்தில் சந்தேகம் உள்ளது’ என்று தெரிவித்துள்ளார்.