'விஸ்வாசம்' படப்பிடிப்பின்போது டான்சர் திடீர் மரணம்: அஜித்தின் மனிதாபிமான நடவடிக்கை
- IndiaGlitz, [Wednesday,November 07 2018]
தல அஜித் நடித்து வரும் 'விஸ்வாசம்' படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிந்துவிட்ட நிலையில் ஒரே ஒரு பாடல் காட்சியின் படப்பிடிப்பு மட்டும் மீதமிருப்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த பாடலின் படப்பிடிப்பு தற்போது புனே பகுதியில் நடைபெற்று வருகிறது.
இந்த பாடலின் படப்பிடிப்பின்போது அஜித்துடன் நடனம் ஆடிய குரூப் டான்சர்களில் ஒருவரான சரவணன் என்பவர் திடீரென வாந்தி எடுத்து மயக்கமானார். இதனையடுத்து அவர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டும், சிகிச்சையின் பலனின்றி மரணம் அடைந்தார்.
இதனால் அஜித் உள்பட படக்குழுவினர் அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். இந்த நிலையில் சரணவனின் மருத்துவ செலவு, மற்றும் அவரது உடலை சென்னை கொண்டு செல்ல உதவினார். ஒருபக்கம் சக டான்சரின் மரணத்தால் சோகத்தில் இருந்த டான்சர்கள், இன்னொரு பக்கம் அஜித்தின் மனிதாபிமான செயலை பார்த்து ஆனந்தக்கண்ணீர் விட்டனர்.