அம்மாவிற்கு உதட்டில் முத்தம் கொடுத்த பிரபலம்: நெட்டிசன்களின் ரியாக்சன்!
Send us your feedback to audioarticles@vaarta.com
சமூக வலைதளங்களில் உள்ள பிரபலங்கள் வித்தியாசமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு பயனர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார்கள் என்பது தெரிந்ததே.
அந்த வகையில் சமூக வலைதள பிரபலம் மற்றும் டான்சர் சிந்தியா இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூகவலைதளத்தில் ஆக்டிவாக இருப்பார் என்பதும் அவர் அவ்வப்போது பதிவு செய்யும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் மிகப்பெரிய அளவில் வைரலாகும் என்பதும் தெரிந்ததே.
இந்த நிலையில் சமீபத்தில் தனது அம்மாவின் பிறந்த நாளை கொண்டாடிய சிந்தியா அம்மாவுக்கு லிப் டு லிப் முத்தம் கொடுத்த புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படத்திற்கு நெட்டிசன்கள் ஆதரவு மற்றும் எதிர்மறை கருத்துக்களை தெரிவித்து ரியாக்ஷன் செய்து வருகின்றனர்.
அம்மாவுடைய பிறந்த நாள் குறித்து சிந்தியா தனது சமூக வலைத்தளத்தில் ’அம்மாவுடைய அன்பான வார்த்தைகள், அவருடைய புன்னகை, அவர் கூறும் ஆறுதல், எங்களுக்கு அவர் வழிகாட்டும் முறை, அன்பு, பாசம், கவனிப்பு ஆகியவை மிகச் சிறந்ததாக இருக்கும்.
எங்கள் அம்மா எங்களுக்காக தியாகம் செய்துள்ளார். அவருடைய மனவலிமையை ஒருபோதும் யாராலும் மாற்ற முடியாது. எனக்கும் என் சகோதரி சில்வியாவுக்கும் ஒரு ஆசிரியரைப் போல எங்களுக்கு வழிகாட்டி வருகிறார். மேலும் ஒரு சிறந்த நண்பராகவும் எங்களுக்கு அவர் இருந்து வருகிறார். ஒரு அழகான தாயை எங்களுக்கு வழங்கியதற்காக கடவுளுக்கு நாங்கள் எப்போதும் நன்றி கூறுவோம்’ என்று தெரிவித்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com