சினிமா வாய்ப்பை நம்பி வாழ்க்கையை தொலைத்த மாணவி! திடுக்கிடும் தகவல்

நடனப்பள்ளி மாணவர் ஒருவர் சினிமா வாய்ப்பு பெற்றுத்தருவதாக கூறிய நடன இயக்குனரை நம்பியதால் இன்று பலரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு வாழ்க்கையையே தொலைத்த திடுக்கிடும் சம்பவம் ஒன்று கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை என்ற பகுதியில் நடந்துள்ளது.
 
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தக்கலை என்ற பகுதியில் நடனப்பள்ளி நடத்தி வரும் அபிஅஜித் என்பவரிடம் ஒரு மாணவி நடனம் பயில வந்துள்ளார். அவருடைய நடனத்திறமையை பார்த்த அபி அஜித், அவருக்கு சினிமா வாய்ப்பு பெற்று தருவதாக கூறியுள்ளார். சில நாட்கள் கழித்து திருச்செந்தூருக்கு ஒரு சினிமா இயக்குனர் வந்திருப்பதாகவும், அவரிடம் அறிமுகம் செய்து வாய்ப்பு பெற்று  தருவதாகவும் ஆசை காட்டிய அபி அஜித், மாணவியை அழைத்து கொண்டு சென்றுள்ளார். ஆனால் தனது நண்பர் ஒருவரை சினிமா இயக்குனர் என்று கூறி நண்பரும் அவரும் சேர்ந்து அந்த மாணவியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.
 

இந்த நிலையில் மாணவியை காணவில்லை என்று அவர் பெற்றோர் கொடுத்த புகாரின் அடிப்படையில் மாணவியை போலீசார் தேடி வந்தனர். ஒருவருடம் கழித்து இராஜபாளையத்தில் நடந்த ஒரு கோவில் திருவிழாவில் நடனம் ஆடிய அபி அஜித்தையும் அந்த மாணவியையும் போலீசார் பிடித்து விசாரித்தனர். அப்போது மாணவி கூறிய வாக்குமூலத்தில் தனக்கு சினிமா வாய்ப்பு பெற்றுத்தருவதாக கூறி பலமுறை தன்னிடம் பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், தன்னை வெளியே எங்கும் செல்லவிடாமல் அபிஅஜித் தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திருந்ததாகவும் தெரிவித்தார். 
 

இதனையடுத்து மாணவியை மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பிய போலீசார் அபிஅஜித்தை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர். பொய்யான நபர்களிடம் சிக்கி சினிமாவில் சேரும் ஆசையால் வாழ்க்கையை தொலைத்துவிட்ட இந்த மாணவி, சினிமா ஆசையால் இருக்கும் பலருக்கு ஒரு உதாரணம் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

More News

உங்க வேலையை முதலில் சரியா பாருங்க! பத்திரிகையாளருக்கு பதிலடி கொடுத்த வரலட்சுமி

குழந்தைகளுக்கான கால்பந்து போட்டி ஆகஸ்ட் 3ஆம் தேதி சென்னையில் தொடங்கவுள்ள நிலையில் இந்த போட்டியின் அம்பாசிடராக நடிகை வரலட்சுமி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

8 பேர் பலி, பல ஆயிரம் கோடி சேதம்: ஃபானி புயலால் உருக்குலைந்த ஒடிஷா!

நேற்று ஒடிஷா மாநிலம் வழியே கரையை கடந்த ஃபானி புயல், அம்மாநிலத்தின் பெரும்பகுதியை உருக்குலைய செய்து பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்களை சேதப்படுத்தியுள்ளது.

500க்கு 499 மதிப்பெண்கள் எடுத்தும் மறுகூட்டலுக்கு சென்ற மாணவி!

தேர்வு முடிவுகள் வரும்போது பாஸ் ஆகிவிட்டாலே மாணவர்கள் திருப்தி அடைந்து கொள்வார்கள். மொத்த மதிப்பெண்கள் குறித்து கவலைப்படவே மாட்டார்கள்.

3 பேர் உயிரிழப்பு, கோடிக்கணக்கில் பொருட்சேதம்; கோரத்தாண்டவம் ஆடிய ஃபானி புயல்

வங்கக்கடலில் உருவான ஃபானி புயல் கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிதீவிர புயலாக உருவாகியதால் இந்த புயல் ஏற்படுத்தும் சேதம் மிக அதிகமாக இருக்கும் என ஏற்கனவே எச்சரிக்கை விடப்பட்டிருந்தது.

கட்டிப்பிடித்து முத்தமிட்டபடி பைக்கில் செல்லும் இளம்ஜோடி: வைரலாகும் வீடியோ

பைக்கில் செல்லும் ஒருசில இளைஞர்கள் படுவேகமாகவும், சாலை விதிகளை மதிக்காமலும் செல்வதால் பலவிபத்துக்களை சந்திக்க நேர்கிறது.