ஆரம்பகாலத்தில் பட்ட கஷ்டங்கள்: கலா மாஸ்டரின் நெகிழ்ச்சியான பேட்டி!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரபல டான்ஸ் மாஸ்டர்கள் கலா மற்றும் பிருந்தா ஆகியோர் நமக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் ஆரம்ப காலத்தில் அவர்கள் பட்ட கஷ்டங்கள் குறித்து மனம் திறந்து கூறினார்கள். கலா மாஸ்டர் தனது அனுபவம் குறித்து கூறிய போது ’ஆரம்பத்தில் தான் கருப்பாக இருந்ததால் கடைசி வரிசையில் ஒதுக்கப்பட்டதாகவும், ஆனால் தன்னுடைய டான்ஸ் திறமையை பார்த்து எந்த தயாரிப்பாளர் கடைசி வரிசைக்கு தள்ளினாரோ, அதே தயாரிப்பாளர் தன்னை முதல் வரிசையில் நிற்க வைத்தார் என்றும் நம்முடைய வேலையை நாம் சரியாக இருந்தால் நமக்கு கிடைக்க வேண்டிய மரியாதை கண்டிப்பாக கிடைக்கும் என்றும் கூறினார்.
மேலும் சினிமாவில் ஆண்கள் ஆதிக்கம் கொஞ்சம் அதிகம் தான் இருக்கும் என்றும், குறிப்பாக டான்ஸ் துறையில் அதிகம் இருந்தது என்றும் அப்போதெல்லாம் டான்ஸ் குழுவில் ஒரு சில பெண்கள் மட்டுமே இருப்பார்கள் என்றும் அதனால் எங்களுக்கு ஆரம்ப காலத்தில் கொஞ்சம் கஷ்டம் இருந்தது என்றும் கூறினார்.
உதவி நடன இயக்குனராக இருக்கும் போது ஒருசிலர் தங்களை மதிக்க மாட்டார்கள் என்றும் ஆனால் அதன்பின் தங்களது திறமையை வெளிப்படுத்திய பின் தான் மதிப்பு உயர்ந்தது என்றும் கூறினார்கள். மேலும் நாங்கள் பெண்கள் போலவே வளரவில்லை எங்கள் தாயார் எங்களை ஆண்கள் போலவே தான் வளர்த்தார் என்றும், நாங்கள் ஆண்கள் போலவே படப்பிடிப்பும் நடந்து கொண்டோம் என்றும் கூறினார். நாங்கள் வலுக்கட்டாயமாக தான் பிருந்தாவை இந்த துறைக்கு அழைத்து வந்தோம் என்றும், அவர் நன்றாக படிக்க வேண்டும் என்றுதான் விரும்பினார் என்றும், ஆனால் அந்த நேரத்தில் எங்களுக்கு ஆள் தேவைப்பட்டதால் பிருந்தாவை நாங்கள் வலுக்கட்டாயமாக இந்த துறைக்கு அழைத்து வந்தோம் என்றும் கலா மாஸ்டர் கூறினார்
மேலும் தங்களுடைய மாஸ்டர் ரகு தங்களுக்கு கூறிய முக்கிய அறிவுரை என்னவெனில் கண்டிப்பாக என்னுடைய பெயரை பயன்படுத்தாமல் உன்னுடைய திறமையின் மூலமே நீ டான்ஸ் மாஸ்டராக வேண்டும் என்று கூறி இருந்தார் என்றும் ,அதை நாங்கள் கடைசிவரை காப்பாற்றினோம் என்றும் அவர் தெரிவித்தார்
எங்கள் இருவருக்கும் ஒரு முக்கிய எண்ணம் இருந்தது, என்னவெனில் டான்ஸ் மாஸ்டர்களில் எவ்வளவு போட்டி இருந்தாலும் அதைப்பற்றி கவலைப்பட கூடாது, நீ உன்னை ஜெயிக்க வேண்டும், நீ உன்னை ஜெயித்தால் போதும், சக போட்டியாளர்களை பற்றி கவலைப்படத் தேவையில்லை என்பதுதான், அதில் தான் நாங்கள் இருவரும் விடாப்பிடியாக இருந்தோம் என்றும் பிருந்தா கூறினார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments