ஸ்டண்ட் காட்சிகளுக்கு வேற லெவலில் பிராக்டிஸ் செய்யும் நடன இயக்குனர்.. வைரல் வீடியோ..!

  • IndiaGlitz, [Tuesday,July 25 2023]

தமிழ் திரையுலகின் முன்னணி நடன இயக்குனர் சாண்டி மாஸ்டர் தற்போது ஒரு சில திரைப்படங்களில் நாயகனாக நடித்து வரும் நிலையில் ஸ்டண்ட் காட்சிகளுக்கு பிராக்டிஸ் செய்யும் வீடியோவை வெளியிட்டுள்ள நிலையில் அந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

தமிழ் திரை உலகின் முன்னணி நடன இயக்குனர் சாண்டி மாஸ்டர் என்பதும் இவர் கமல், ரஜினி, விஜய் உள்பட பல முன்னணி நடிகர்களின் படங்களில் பணிபுரிந்துள்ளார் என்பதும் தெரிந்ததே

அது மட்டும் இன்றி தற்போது அவர் சில படங்களில் நடித்து வருகிறார். குறிப்பாக அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் இளையராஜா இசையில் உருவாகி வரும் திரைப்படத்தில் நாயகனாக சாண்டி மாஸ்டர் நடித்து வருகிறார் என்றும் இந்த படத்திற்கு ’கிப்ட்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில் சாண்டி மாஸ்டர் சற்று முன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்டண்ட் பிராக்டிஸ் செய்யும் வேற லெவல் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் சிலம்பம் உள்பட பல்வேறு ஸ்டண்ட் பிராக்டிஸ் செய்யும் காட்சிகள் உள்ளது. இந்த வீடியோவை பார்த்து ரசிகர்கள் ஆச்சரியமடைந்து லைக்ஸ், கமெண்ட்களை குவித்து வருகின்றனர்.