சூப்பர் ஸ்டார் ரஜினியின் அறிமுக பாடலில் இளம் நடன இயக்குனர்

  • IndiaGlitz, [Wednesday,August 09 2017]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் தனுஷ் தயாரிப்பில் உருவாகி வரும் 'காலா' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் ரஜினி சம்பந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பு வெகுவிரைவில் நிறைவு பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் ரஜினி படங்களின் ஹைலைட்டாக இருப்பது அவருடைய அறிமுக பாடல் தான், அண்ணாமலை, பாட்ஷா படங்களின் அறிமுகப்பாடல் இன்று வரை ஹிட். இந்த நிலையில் 'காலா' படத்திலும் ரஜினிக்கு ஒரு அட்டகாசமான அறிமுகபாடல் உள்ளதாகவும், சந்தோஷ் நாராயணன் கம்போஸ் செய்த இந்த பாடலின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.

இந்த பாடலுக்கு டான்ஸ் மாஸ்டர் சாண்டி நடனம் அமைத்து வருகிறார். ரஜினியின் படத்திற்கு அதிலும் குறிப்பாக ரஜினியின் அறிமுக பாடலுக்கு நடனம் அமைக்கும் பொறுப்பு இளம் நடன இயக்குனர் சாண்டிக்கு கிடைத்துள்ளது மிகப்பெரிய அதிர்ஷ்டமாகவே கருதப்படுகிறது.

ரஜினிகாந்த், ஹுமா குரேஷி, ஈஸ்வரிராவ், நானா படேகர், அஞ்சலி பாட்டீல், சமுத்திரக்கனி உள்பட பலர் இந்த படத்தில் நடித்து வருகின்றனர். முரளி ஒளிப்பதிவில், ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பில் இந்த படம் வளர்ந்து வருகிறது.