சிம்பு பேனருக்கு ரசிகர்களுடன் பாலாபிஷேகம் செய்த நடன இயக்குனர்

  • IndiaGlitz, [Friday,February 01 2019]

சிம்பு நடித்த 'வந்தா ராஜாவாதான் வருவேன்' திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது. சிம்பு ரசிகர்கள் படத்தை ரசித்து பார்த்து பாசிட்டிவ் விமர்சனங்களை சமூக வலைத்தளங்களில் பதிவு செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் 'தனது பேனருக்கு பாலாபிஷேகம் செய்ய வேண்டாம் என்றும், அண்டா அண்டாவாக பாலாபிஷேகம் செய்யுங்கள் என்றும், அண்டாவில் பால் காய்ச்சி ரசிகர்களுக்கு கொடுங்கள் என்றும் மாறி மாறி வீடியோவில் சிம்பு பேசினார் என்பது தெரிந்ததே!

ஆனால் சிம்புவின் பெரும்பாலான ரசிகர்கள் இன்று திரையரங்குகள் முன் வைக்கப்பட்டிருந்த சிம்புவின் பேனர்களுக்கு பாலாபிஷேகம் செய்தனர். இந்த நிலையில் நடன இயக்குனர் ராபர்ட் இன்று 'வந்தா ராஜாவாதான் வருவேன்' படத்தை முதல் நாள் முதல் காட்சி பார்க்க வந்திருந்தார். அப்போது அவர் ரசிகர்களுடன் இணைந்து சிம்புவின் பேனர்களுக்கு பாலாபிஷேகம் செய்தார். இதுகுறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
 

More News

இளையராஜா நிகழ்ச்சியை அவமதித்துவிட்டீர்கள்: நீதிபதி கிருபாகரன்

இளையராஜாவின் 75வது பிறந்த நாளை முன்னிட்டு அவரை பாராட்டும் வகையில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் சென்னையில் பிப்ரவரி 2 மற்றும் 3 ஆகிய தேதிகளில் 'திரைக்கொண்டாட்டம்' என்ற சிறப்பு நிகழ்ச்சி

ஐடி துறையில் கால் பதிக்கும் ஜிவி பிரகாஷ்!

ஜிவி பிரகாஷ் நடித்த 'சர்வம் தாளமயம்' வெளியாகி பார்வையாளர்களின் பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வருகிறது. குறிப்பாக ஜிவி பிரகாஷ் ஏற்று நடித்துள்ள வித்தியாசமான கேரக்டருக்கு வாழ்த்துக்கள்

ஆர்யா-சாயிஷா திருமண செய்தி வதந்தி! 'எங்க வீட்டு மாப்பிள்ளை' போட்டியாளர் திடுக் தகவல்

நடிகர் ஆர்யா, நடிகை சாயிஷாவை திருமணம் செய்து கொள்ளவிருப்பதாகவும் இருவீட்டார் சம்மதத்துடன் நடைபெறும் இந்த திருமணம் வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்தன.

மத்திய பட்ஜெட்டில் திரையுலகினர்களுக்கான மிகபெரிய சலுகை

மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட்டை இன்று இடைக்கால நிதியமைச்சர் பியூஷ் கோயல் தாக்கல் செய்தார்.

மகனை அடுத்து மகள் செய்த சாதனை: தளபதி விஜய் பெருமிதம்

விஜய்யின் மகன் சஞ்சய் வெளிநாட்டு படிப்பு, குறும்படத்தில் நடிப்பது, பிரபலங்களை பேட்டி எடுப்பது என பிசியாக இருக்கும் நிலையில் இன்னொரு பக்கம் விஜய்யின் மகளும்