காறி துப்பிடுவேன்: வனிதா விவகாரத்தில் கோபப்பட்ட ராபர்ட்

நடிகை வனிதா மற்றும் பீட்டர்பால் திருமணம் சமீபத்தில் நடந்த நிலையில் இந்தத் திருமணம் பீட்டர்பால் முதல் மனைவியால் சர்ச்சைக்குள்ளாகி இது குறித்த செய்திகள் பரபரப்பாக ஊடகங்களில் வெளிவந்தது. ஒரு கட்டத்தில் கொரோனா வைரஸ் பரபரப்பையும் மீறி வனிதா திருமண செய்திகள் ஊடகங்களில் தலைப்புச் செய்தியானது என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் வீடியோ ஊடகம் ஒன்றில் வனிதாவுடன் நெருக்கமாக இருந்த டான்ஸ் மாஸ்டர் ராபர்ட்டை வனிதா வனிதாவின் மூன்றாவது கணவர் என்று குறிப்பிட்டு, வனிதாவின் புதிய திருமணம் குறித்து அவர் கொந்தளித்ததாகவும் வீடியோ ஒன்று வெளியானது. இந்த வீடியோவை பார்த்த டான்ஸ் மாஸ்டர் ராபர்ட் மிகவும் ஆத்திரமடைந்து ஒரு பேட்டி அளித்துள்ளார். இந்த பேட்டியில் வனிதாவுடன் தான் உதவி செய்யும் நோக்கில் பழகியதாகவும், ஆனால் அவருடைய உண்மையான குணம் தெரிந்து ஒதுங்கிவிட்டதாகவும், தன்னை 3வது கணவர் என்று குறிப்பிட்டதே தவறு என்றும் மேலும் நான் கொந்தளித்ததாக ஒரு பொய்யான செய்தியை வெளியிட்டிருப்பதாகவும் கூறினார்.

மேலும் வனிதா திருமணம் குறித்து தான் எந்தவிதமான கருத்துக்களையும் கூறாத நிலையில் இப்படி பொய்யான செய்திகளை பார்வையாளர்களை கவர வேண்டும் என்பதற்காக பதிவு செய்து வருகின்றனர் என்றும், நான் என்னுடைய வேலையை பார்த்துக் கொண்டிருக்கிறேன் என்றும், வனிதாவும் அவருடைய வேலையை பார்த்துக் கொண்டிருக்கிறார் என்றும், ஆனால் இடையில் இருக்கும் இது மாதிரி ஒரு சில ஊடகங்கள் அறிவே இல்லாமல் செய்தி வெளியிட்டு வருவதாகவும் தெரிவித்தார். இந்த வீடியோவை பதிவு செய்தவரை நேரில் பார்த்தால் காறித் துப்பிவிடுவேன் என்று கோபப்பட்டு ராபர்ட் பேசியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

More News

ஹேப்பி பர்த்டே ஹஸ்பண்ட்: சாக்சி தோனியின் க்யூட் பதிவு

கிரிக்கெட்டின் தல என்று அன்புடன் அழைக்கப்படும் மகேந்திர சிங் தோனி அவர்களின் 39 வது பிறந்தநாள் இன்று நாடு முழுவதும் கிரிக்கெட் ரசிகர்களால் விமர்சையாக கொண்டாடப்பட்டது.

விஷால் மேனேஜரின் கார் கண்ணாடி உடைப்பு: பெரும் பரபரப்பு

நடிகர் விஷாலின் விஷால் பிலிம் பேக்டரி நிறுவனத்தின் மேலாளர் ஹரிகிருஷ்ணன் என்பவர் சென்னை வடபழனி காவல் நிலையத்தில் ரம்யா என்ற பெண் கணக்காளர் 45 லட்சம் ரூபாய் வரை

சன் டிவியுடன் கனெக்சன் ஆனது விஜய் சேதுபதியின் அடுத்த படம்!

மக்கள் செல்வன் விஜய்சேதுபதியின் அரசியல் த்ரில் திரைப்படமான 'துக்ளக் தர்பார்' என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்த நிலையில் திடீரென கொரோனா வைரஸ் ஊரடங்கு

சினிமா படப்பிடிப்பு தொடங்குவது குறித்து முக்கிய அறிவிப்பை வெளியிட்ட மத்திய அமைச்சர்

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் தொடர்ச்சியாக நான்கு மாதங்கள் ஊரடங்கு உத்தரவு நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ளது.

உயிர் போகும் நேரத்திலும் குற்றவாளியின் வண்டி எண்ணை குறித்து வைத்த போலீஸ்

ஹரியானா  மாநிலத்தில் காவல்துறையைச் சேர்ந்த இருவர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவத்தில் புலன் விசாரணையில் துப்பு கிடைக்காமல் போலீசார் திணறி வந்த நிலையில் கொல்லப்பட்ட போலீசாரின்