பிரபல அரசியல் கட்சியில் இணைந்த டான்ஸ் மாஸ்டர் கலா!

கடந்த சில நாட்களாக கோலிவுட் நட்சத்திரங்கள் பலர் அரசியல் கட்சியில் இணைந்து வருவதை பார்த்து கொண்டுதான் இருக்கின்றோம். கமல்ஹாசன் கட்சியில் கோவை சரளா, அதிமுகவில் ரவிமரியா, ஒய்.எஸ்.ஆர் கட்சியில் நடிகர் அலி, அமமுகவில் பாடகர் மனோ என ஒருசில நட்சத்திரங்கள் அரசியலில் குதித்தனர்

இந்த நிலையில் கடந்த பல வருடங்களாக தென்னிந்திய திரையுலகில் டான்ஸ் மாஸ்டராக இருந்து வரும் கலா, இன்று தினகரனின் அமமுகவில் இணைந்துள்ளார்.

இன்று அமமுக துணை பொதுச்செயலாளர் தினகரன் முன் அக்கட்சியில் தன்னை இணைத்து கொண்ட டான்ஸ் மாஸ்டர் கலா, 'பொதுவாக ஒரு இயக்கம், தலைவர் என்றால் அவர் நம் மனதிற்கு பிடித்தவராக இருக்க வேண்டும். அந்த வகையில் டிடிவி தினகரன் எனக்கு பிடித்த தலைவராக இருக்கிறார். அவரது செயல்பாடுகளும், அதில் வெளிப்படும் நேர்மைத்தன்மையும் என்னை கவர்ந்துவிட்டது. நான் 30 வருடங்களாக திரைத்துறையில் இருந்தவள். என்னிடம் ஒரு பொறுப்பு கொடுக்கப்பட்டால் அதை திறம்படச் செய்வேன்” என்று கூறியுள்ளார்.

வரும் தேர்தலில் அமமுகவை ஆதரித்து டான்ஸ் மாஸ்டர் கலா பிரச்சாரம் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது

More News

தொடர்ந்து 45 நாட்கள் பப்ஜி விளையாடிய மாணவர் பரிதாப பலி!

பப்ஜி என்ற ஆன்லைன் கம்ப்யூட்டர் விளையாட்டு,  மாணவர்கள் மற்றும் இளைஞர்களை அடிமைப்படுத்துவதால் இந்த விளையாட்டை தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை

ஏ.கே.போஸ் வெற்றி செல்லாது! சென்னை ஐகோர்ட் அதிரடி தீர்ப்பு

திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதியில் நடைபெற்ற தேர்தலில் அதிமுக வேட்பாளர் ஏ.கே.போஸ் வெற்றி பெற்றது செல்லாது என்று அறிவிக்குமாறு சரவணன் என்பவர் தாக்கல் செய்த வழக்கு

'விக்ரம் வேதா' தெலுங்கு ரீமேக் குறித்த முக்கிய அறிவிப்பு

மாதவன், விஜய் சேதுபதி நடிப்பில் புஷ்கர் காயத்ரி இயக்கத்தில் கடந்த 2017ஆம் ஆண்டு வெளிவந்த 'விக்ரம் வேதா' திரைப்படம் சூப்பர்ஹிட் ஆனது.

தீபாவின் திடீர் முடிவால் அதிமுக இன்ப அதிர்ச்சி

ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, வரும் பாராளுமன்ற மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் தனித்து போட்டியிடுவதாக சில நாட்களுக்கு முன் அறிவித்தார்.

வீட்டுக்காவலில் நடிகர் மோகன்பாபு? ஆந்திராவில் பரபரப்பு

பிரபல தெலுங்கு நடிகர் மோகன்பாபு வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளதாக வெளிவந்துள்ள செய்தியால் ஆந்திராவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது