கமல்ஹாசனுக்கு எதிராக தெருத்தெருவாக பிரச்சாரம் செய்யும் கலா மாஸ்டர்! வைரல் புகைப்படங்கள்!

  • IndiaGlitz, [Friday,March 19 2021]

உலகநாயகன் கமல்ஹாசன் அவர்கள் அரசியல் கட்சியைத் தொடங்கி முதல் முதலாக தேர்தல் களத்தில் இறங்கி உள்ளார். அவர் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடுகிறார் என்பதும் அவரை எதிர்த்து பாஜக பிரமுகர் வானதி சீனிவாசன் போட்டியிடுகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது

இருவரும் சமீபத்தில் வேட்புமனுவை தாக்கல் செய்துவிட்டு தீவிரமாக பிரசாரம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் சமீபத்தில் பாஜகவில் இணைந்த டான்ஸ் மாஸ்டர் கலா, பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன் அவர்களுக்காக பிரச்சாரத்தை தொடங்கி உள்ளார்

முதன்முதலாக தேர்தல் பிரச்சாரம் செய்வதாகவும் எங்களுடைய வெற்றி வேட்பாளர் வானதி ஸ்ரீனிவாசனுக்கு ஆதரவாக தொகுதி முழுவதும் பிரச்சாரம் செய்வதாகவும் அவர் புகைப்படங்களுடன் கூடிய தகவலை தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளார்

இந்த தொகுதியில் வெற்றி பெற்றே தீர வேண்டும் என்பதற்காக தெருத்தெருவாக வானதி சீனிவாசன் நடந்தே சென்று பிரசாரம் செய்து வரும் நிலையில், அவருடன் கலா மாஸ்டரும் நடந்தே சென்று பிரசாரம் செய்து வருகிறார். நாங்கள் பிரச்சாரம் செய்யும் இடங்களில் எல்லாம் மிகப் பெரிய வரவேற்பு எங்களுக்கு கிடைத்து வருகிறது என்றும் அதனால் நாங்கள் இந்த தொகுதியில் வெற்றி பெற்று விடுவோம் என்றும் கலா மாஸ்டர் குறிப்பிட்டுள்ளார்.

More News

பாண்டியன் ஸ்டோர்ஸ் புதிய முல்லை செய்த வேலை: அதிர்ச்சியில் ரசிகர்கள்

சின்னத்திரை சித்ரா நடித்து வந்த தொடர்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ் என்பதும் இந்த தொடர் மிகப்பெரிய வரவேற்பை பெற்று விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த நிலையில் திடீரென சித்ரா எதிர்பாராதவிதமாக

கண்ணாடி முன் ஹாட் கிளாமருடன் கொடுத்த போஸ்: லெஜண்ட் சரவணன் நாயகியின் வைரல் போட்டோஷூட்

சென்னை சரவணா ஸ்டோர் உரிமையாளர் லெஜெண்ட் சரவணன் அவர்கள் தமிழ் திரைப்படம் ஒன்றில் நடித்து வருகிறார் என்பதும் பிரம்மாண்டமாக உருவாகி வரும் இந்தப் படத்தில் நாயகியாக ஊர்வசி ரௌட்டாலா

என் முன்னாடியே ப்ரித்தி ஜிந்தாவுக்கு முத்தமா? கொந்தளித்த ஜெனிலியாவின் வீடியோ!

தமிழ் தெலுங்கு திரையுலகில் பிரபலமாக இருந்த நடிகை ஜெனிலியா பிரபல இந்தி நடிகர் ரிதேஷ் தேஷ்முக்கை காதலித்து திருமணம் செய்து கொண்டார் என்பதும்

தேர்தல் துளிகள்: 19 மார்ச் 2021

திமுக கூட்டணியுடன் தேர்தல் களம் காணும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் மாரிமுத்து கடந்த சில தினங்களாக சமூக வலைத்தளங்களில் அதிகம் பேசப்பட்டு வருகிறார்

பிக்பாஸ் சீசன் 5 போட்டியாளர் இந்த ஹீரோவா?

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் ஒன்று பிக்பாஸ் என்பதும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நான்கு சீசன்களும் பார்வையாளர்களின் வரவேற்பை பெற்றது என்பதும் தெரிந்ததே.