அண்ணாமலைக்கு ஆதரவாக செம டான்ஸ் ஆடிய 'கலா' மாஸ்டர்: வீடியோ வைரல்
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழகத்தில் நாளை சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது என்பதும் நேற்று இரவு 7 மணி உடன் தேர்தல் பிரசாரம் முடிவடைகிறது என்பதும் தெரிந்தது. இந்த நிலையில் நேற்றைய தேர்தல் இறுதி கட்ட பிரச்சாரத்தின்போது அரவக்குறிச்சி பாஜக வேட்பாளர் அண்ணாமலைக்கு ஆதரவாக டான்ஸ் மாஸ்டர் கலா தீவிர பிரச்சாரம் செய்தார்.
அப்போது அவர் அண்ணாமலை உடன் திறந்த காரில் சென்று கொண்டிருந்தபோது திடீரென பாடல் ஒன்றுக்கு வேனில் இருந்தபடியே அண்ணாமலை கையைப் பிடித்துக் கொண்டு நடனம் ஆடினார். அவரது ஆட்டத்தை பார்த்து உற்சாகம் ஆகி சுற்றி இருந்தவர்களும் நடனமாட தொடங்கினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது
ஒரு கட்டத்தில் வேனில் இருந்து கீழே இறங்கிய கலா மாஸ்டர் அங்கும் நடனமாடினார் என்பதும் நடனமாடிக் கொண்டே அவர் வாக்கு சேகரித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் கலா மாஸ்டரின் ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது
மேலும் அரவக்குறிச்சி தொகுதியில் அண்ணாமலைக்கு மிகப்பெரிய ஆதரவு கிடைத்திருப்பதாகவும் இதனை அடுத்து அவர் நிச்சயம் வெற்றி பெறுவார் என்றும் கலா மாஸ்டர் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
Fantastic response - Undoubtedly the winner @narendramodi @BJYMinTN @annamalai_k @cibi_m @BJP4India @AmitShah @blsanthosh @JPNadda @khushsundar pic.twitter.com/L4BByr6P6q
— Kala Master (@kala_master) April 4, 2021
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments