ஒரே ஷாட்டில் டான்ஸ் ஆடும் நடிகர், டான்ஸே வராத நடிகர்: கலா, பிருந்தா மாஸ்டர்கள்!

  • IndiaGlitz, [Tuesday,June 29 2021]

டான்ஸ் மாஸ்டர் கலா மற்றும் பிருந்தா ஆகியோர் நமக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் எவ்வளவு கஷ்டமான மூவ்மெண்ட் ஆக இருந்தாலும், ஒரே ஷாட்டில் ஆடும் அளவுக்கு திறமை உள்ளவர் என்றால் அது நடிகர் விஜய் தான் என்றும், அதே நேரத்தில் எத்தனை முறை சொல்லிக் கொடுத்தாலும் ஆடவே தெரியாத நடிகர் என்றால் அவர் விக்னேஷ் என்றும் தெரிவித்தனர்.

மேலும் பாக்யராஜ் அவர்களின் டான்ஸ் பற்றி யாரும் கேலி செய்வதை ஏற்று கொள்ள முடியாது என்றும் அவர் அவருடைய ஸ்டைலில் ஆடுகிறார் என்றும் அது ஒரு யூனிக் ஆன விஷயம் என்றும் பிருந்தா தெரிவித்தார். அதேபோல் மம்முட்டிக்கு டான்ஸ் வராது என்று சொன்னால் நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்றும் அவருக்கு என ஒரு ஸ்டைல் இருக்கிறது என்றும் பிருந்தா தெரிவித்துள்ளார்.

மேலும் நடிகர் நடிகர்களுக்கு எந்த மாதிரியான ஸ்டெப்ஸ் வரும் என்பதை அறிந்து நாம் தான் அவர்களுக்கு சரியான ஸ்டெப்ஸ் கொடுக்க வேண்டும் என்றும் கூறிய பிருந்தா, மம்முட்டி போல் யாராலும் நடிக்க முடியாது, அதே போல் நம்மை போல அவர் ஆட வேண்டும் என்று நினைப்பதும் தவறு என்றும் அவர்களுக்கு என்ன பொருத்தமான ஸ்டெப் கொடுத்தால் கண்டிப்பாக அவர்கள் அருமையாக ஆடுவார்கள் என்றும் பிருந்தா தெரிவித்தார்.