கமல்ஹாசனை சந்தித்து வாழ்த்து பெற்ற நடன இயக்குனர்கள் தம்பதி!
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழ் சினிமாவில் நடன இயக்குனராக இருக்கும் தம்பதிகள் உலகநாயகன் கமல்ஹாசனை சந்தித்து ஆசி பெற்றதோடு, அவருடைய ’விக்ரம்’ படத்தின் வெற்றிக்கு தங்களது வாழ்த்துக்களையும் தெரிவித்தனர்.
உலகநாயகன் கமல்ஹாசன் நடித்த ’விக்ரம்’ திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்றதையடுத்து ஒட்டுமொத்த திரையுலகமும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றன. ஒரு சில பிரபலங்கள் கமல்ஹாசனை நேரில் சந்தித்து தங்களது வாழ்த்தை தெரிவித்து அவரிடம் ஆசி பெற்று வருகின்றனர் என்பதை பார்த்து வருகிறோம்.
அந்த வகையில் கோலிவுட் திரையுலகில் முன்னணி நடன இயக்குனர் ஷோபி மற்றும் அவரது மனைவியும் நடன இயக்குநருமான லலிதா ஷோபி ஆகிய இருவரும் தங்களது மகள் சியமந்தக மணியை ஸ்யமந்தகமணி அஷ்விகா ஷோபி உடன் கமலஹாசனை சந்தித்து அவரிடம் ஆசி பெற்றனர். மேலும் ’விக்ரம்’ படத்தின் வெற்றிக்கு தங்களது வாழ்த்துக்களையும் தெரிவித்தனர்.
கமலஹாசன் நடித்த ’வசூல் ராஜா எம்பிபிஎஸ்’ என்ற திரைப்படத்தின் மூலம் தான் ஷோபி நடன இயக்குநராக அறிமுகமானார் என்பதும் அதன் பிறகு தமிழ் திரையுலகம் மட்டுமின்றி பாலிவுட் திரை உலகிலும் அவர் பல திரைப்படங்களுக்கு நடன இயக்குனராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது ஷோபியின் மனைவி லலிதா ஷோபி நிறைமாத கர்ப்பிணியாக இருப்பதை அடுத்து அவரது உடல் நலத்தை கமலஹாசன் விசாரித்து அவருக்கு வாழ்த்து தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Got blessings from Our Godfather #Ulaganayagan @ikamalhaasan sir ??????❤❤❤??
— Shobi Paulraj (@shobimaster) June 19, 2022
We are so so happy ?? love you sir ❤??#KamalHaasan?? #KamalHaasan @shobimaster @LalithaShobi #SyamantakamaniAshvikaShobi #SyamantakamaniAshvika#Syamantakamani
God Bless pic.twitter.com/fvFnbFMMEb
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments