பிரபல நடன இயக்குனர் புற்றுநோயால் மரணம்: பாரதிராஜா இரங்கல்!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரபல நடன இயக்குனர் ஒருவர் புற்றுநோயால் காலமானார். அவரது மறைவிற்கு இயக்குனர் இமயம் பாரதிராஜா உள்பட பலர் தங்களுடைய இரங்கலை தெரிவித்து வருகின்றனர்
நடன இயக்குனர்கள் ராஜசுந்தரம், பிரபுதேவா நடன குழுவில் இருந்தவர் ஜெயராஜ் என்னும் கூல் ஜெயந்த. குரூப் டான்ஸராக இருந்த இவர் ’காதல் தேசம்’ என்ற படத்தின் மூலம் நடன இயக்குனராக அறிமுகமாகி அதன் பின் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களுக்கு நடன இயக்குனராக பணியாற்றி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது
சென்னை மாம்பலத்தில் வசித்து வந்த இவர் புற்றுநோயால் கடந்த சில மாதங்களாக அவதிப்பட்டு வந்ததாகவும், இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலை அவர் மரணமடைந்தார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அவரது இறுதி சடங்கு இன்று மாலை நடைபெற உள்ளது
மறைந்த நடன இயக்குநர் கூல் ஜெயந்த் அவர்களுக்கு சக நடன இயக்குனர்கள், நடன கலைஞர்கள், திரையுலக பிரபலங்கள் மற்றும் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இயக்குனர் இமயம் பாரதிராஜா அவர்கள் தனது சமூக வலைதளப் பக்கத்தில் நடன இயக்குனர் கூல் ஜெயந்த் மறைவு குறித்து கூறியிருப்பதாவது:
பாசத்துக்குரியவனே
உன் மறைவு பேரதிர்ச்சிடா..
மாஸ்டர் கூல் ஜெயந்த்யை
இழந்து வாடும் குடும்பத்தினருக்கு
ஆழ்ந்த இரங்கல்.
பாசத்துக்குரியவனே
— Bharathiraja (@offBharathiraja) November 10, 2021
உன் மறைவு பேரதிர்ச்சிடா..
மாஸ்டர் கூல் ஜெயந்த்யை
இழந்து வாடும் குடும்பத்தினருக்கு
ஆழ்ந்த இரங்கல். pic.twitter.com/WE8F9opqKk
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments