நீண்ட இடைவெளிக்கு பின் ஆக்ரோஷமான ஒரு அம்மன் பாட்டு: பிருந்தாவின் 'தக்ஸ்' பாடல் ரிலீஸ்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
நடன இயக்குனர் பிருந்தா இயக்கத்தில் உருவான ’ஹேய் சினாமிகா’ என்ற திரைப்படம் நல்ல வரவேற்பு பெற்ற நிலையில் தற்போது அவர் இயக்கி முடித்து உள்ள இரண்டாவது திரைப்படம் ‘தக்ஸ்’. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து சமீபத்தில் டிரைலர் வெளியாகி இணையத்தில் வைரலானது.
தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் உருவாகியுள்ள இந்த படத்தில் ஹிருது ஹாரூன், பாபி சிம்ஹா, ஆர்.கே.சுரேஷ், முனிஷ்காந்த், அனஸ்வர ராஜன், சரத் அப்பானி உள்பட பலர் நடித்துள்ளனர்
இந்த நிலையில் இந்த படத்தில் இடம் பெற்ற அம்மன் பாடல் ஒன்று சற்றுமுன் வெளியாகி உள்ளது. சிம்பு, ஜெயம் ரவி, காஜல் அகர்வால் மற்றும் அதிதிராவ் ஹைத்தி ஆகிய நான்கு பிரபலங்கள் வெளியிட்டுள்ள இந்த பாடல் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
சாம் சிஎஸ் கம்போஸ் செய்த இந்த பாடலை விவேக் எழுதியுள்ளார் என்பதும் இந்த பாடலை சாம் சிஎஸ், அன்புமணி, அபிஷேக், புவனா ஆகியோர் பாடியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ் திரைப்படத்தில் நீண்ட இடைவேளைக்கு பின் ஒரு அம்மன் பாடல் ஆக்ரோஷமாக வெளியாகி உள்ளதை அடுத்து இந்த பாடலை அனைவரும் ரசித்து வருகின்றனர்
பிருந்தா இயக்கத்தில் பிரியேஷ் குருசுவாமி ஒளிப்பதிவில் பிரவீன் ஆண்டனி படத்தொகுப்பில் உருவான இந்த படத்தை HR பிக்சர்ஸ் - ரியா ஷிபு தயாரித்துள்ளனர். RRR படத்தின் ப்ரோமோ எடிட்டிங் மூலம் பிரபலமான எடிட்டர் பிரவீன் ஆண்டனி, இந்த ஆக்ஷன் படத்தை எடிட் செய்துள்ளார். பிரியேஷ் குருசாமி ஒளிப்பதிவு செய்துள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout