சிங்கிள் ஷாட்டில் பாடல், பிரபல ஹீரோவை பாராட்டிய பிருந்தா: வைரல் வீடியோ
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழ் திரையுலகின் முன்னணி நடன இயக்குனர் பிருந்தா தனது சமூக வலைத்தளத்தில் ‘வெந்து தணிந்தது காடு’ படத்தில் இடம்பெற்ற ’மல்லிகைப்பூ’ பாடலை சிங்கிள் ஷாட்டில் எடுத்ததாக கூறி அந்த படத்தின் ஹீரோ சிம்புவுக்கு தனது பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் வெளியான ’வெந்து தணிந்தது காடு’ திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்றது என்பதும் சிம்பு மற்றும் கவுதம் மேனனுக்கு இந்த படம் வெற்றி படமாக அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இந்த படத்தில் இடம்பெற்ற ’மல்லிகை பூ’ என்ற பாடல் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது என்பது தெரிந்ததே. தாமரை எழுதிய இந்த பாடலை மதுஸ்ரீ பாடி இருந்தார் என்பதும் கணவனை பிரிந்து வாழும் மனைவி பாடும் பாடலை கணவன் தனது நண்பர்களுடன் கேட்கும் வகையில் இந்த பாடல் படமாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இந்த பாடலை சிங்கிள் ஷாட்டில் எடுத்தோம் என்றும், மிகச் சிறந்த டான்ஸர் ஆன சிம்பு இந்த பாடலில் அபாரமாக டான்ஸ் ஆடினார் என்றும் சிங்கிள் ஷாட்டில் எடுத்து முடித்தவுடன் படக்குழுவினர்களிடம் இருந்து கிடைத்த பாராட்டை பெற்ற போதே இந்த பாடல் நிச்சயம் ஹிட்டாகும் என்று தான் நினைத்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
இது குறித்த வீடியோவை அவர் தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து உள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.
#Mallipoo memory?? thanks to @menongautham for this song?? and the most graceful dancer @SilambarasanTR_ ???? I saw the response for the song as soon as we completed the song in one shot and I knew you would all love the song ❤️ it’s because of @arrahman sir’s magical music?????? pic.twitter.com/DziEP1W05r
— Brindha Gopal (@BrindhaGopal1) September 19, 2022
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments