முதல்வர் ஸ்டாலினுக்கு டான்ஸ் கற்று கொடுத்த பிருந்தா: வைரல் வீடியோ

தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்களுக்கு டான்ஸ் மாஸ்டர் பிருந்தா நடனம் கற்றுக் கொடுத்த வீடியோ அவரது சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ள நிலையில் இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.

தமிழகத்தில் தற்போது செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற்று வருகிறது என்பதும் இதன் தொடக்கவிழா நேற்று முன்தினம் சென்னையில் மிகவும் பிரமாண்டமாக நடைபெற்றது என்பதும் தெரிந்ததே.

தமிழகத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற உள்ளதை அடுத்து இசைப்புயல் ஏஆர் ரகுமான் இசையில் செஸ் ஆன்ந்தம் பாடல் ஒன்று வெளியானது. இந்த பாடலில் தமிழக முதல்வர் முக ஸ்டாலின், இசைப்புயல் ஏ ஆர் ரகுமான் உள்பட பலர் நடித்திருந்தனர்.

இந்த நிலையில் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் இந்த பாடலில் தோன்று காட்சியை நடன இயக்குனர் பிருந்தா சொல்லிக்கொடுத்த வீடியோ அவரது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானுக்கும் டான்ஸ் ஸ்டெப்ஸ்களை பிருந்தா சொல்லி கொடுத்தார்.

முதல்வர் முக ஸ்டாலின் அவர்களுடன் இந்த படப்பிடிப்பில் கலந்து கொண்டதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி என்று பிருந்தா அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார். இந்த பாடலை இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.