யாரும் சீட்டில் உட்கார்ந்து படம் பார்க்க மாட்டார்கள்: 'வாரிசு' குறித்து பிரபலம் டுவிட்!
Send us your feedback to audioarticles@vaarta.com
திரையரங்குகளில் விஜய்யின் ‘வாரிசு’ படத்தை யாரும் சீட்டில் உட்கார்ந்து படம் பார்க்க மாட்டார்கள் என பிரபலம் ஒருவர் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘வாரிசு’ என்பதும் இந்த படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் இம்மாத இறுதிக்குள் முடிந்து விடும் என்றும் நவம்பர் இறுதியில் அல்லது டிசம்பரில் அவர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் ’தளபதி 67’ படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என்றும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் ‘வாரிசு’ திரைப்படத்தில் இடம்பெற்ற ஒரு பாடலுக்கு பிரபல நடன இயக்குனர் ஜானி மாஸ்டர் நடன இயக்குனராக பணிபுரிந்துள்ளார் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் படத்தின் பாடல் குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் ஜானி பதிவு செய்துள்ள டுவிட் தற்போது வைரலாகி வருகிறது. தில் அவர் கூறியிருப்பதாவது:
‘தளபதி விஜய் ரசிகர்களே! குறித்து வைத்துக்கொள்ளுங்கள், நடிகர் விஜய்யின் மாஸ் டான்ஸூக்கு தயாராகுங்கள். திரையரங்குகளில் யாரும் சீட்டில் உட்கார்ந்து பார்க்க மாட்டீர்கள்’ என்று தெரிவித்துள்ளார். அவரது இந்த டுவிட் ‘வாரிசு’ பாடலுக்கு மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
விஜய், ராஷ்மிகா மந்தனா பிரகாஷ்ராஜ், சரத்குமார், ஷாம், யோகிபாபு, பிரபு, ஜெயசுதா, ஸ்ரீகாந்த், சங்கீதா, சம்யுக்தா, குஷ்பு உள்பட பலர் நடிக்கின்றனர். கார்த்திக் பழனி ஒளிப்பதிவில், பிரவிண கே.எல் படத்தொகுப்பில் உருவாகி வரும் இந்த படம் அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தில் வெளியாகவுள்ளது.
#ThalapathyVijay Sir fans, mark my words ✨️
— Jani Master (@AlwaysJani) October 14, 2022
Get ready to witness the MAAAAAAAAAASSSSSSSSS level dance from @actorvijay garu ?? No one's going to just sit and watch it in theatres... It'll be ??????????#Varisu @directorvamshi @MusicThaman @SVC_official pic.twitter.com/KS6vZITLqN
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com