நடன இயக்குனர் பிருந்தாவின் அடுத்த படம்: டைட்டில் லுக் ரிலீஸ்
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழ் திரை உலகின் முன்னணி நடன இயக்குனர்களில் ஒருவரான பிருந்தா இயக்கிய முதல் படமான ’ஹே சினாமிகா’ கடந்த மார்ச் மாதம் வெளியானது. துல்கர் சல்மான், அதிதிராவ் ஹைத்ரி, காஜல் அகர்வால் உள்பட பலர் நடித்துள்ள இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றது என்பது தெரிந்ததே.
இந்த நிலையில் நடன இயக்குனர் பிருந்தா இயக்கும் அடுத்த படம் குறித்த அறிவிப்பு சற்றுமுன் வெளியாகி உள்ளது. இந்த படத்தின் டைட்டில் ‘தக்ஸ்’ என்று வைக்கப்பட்டுள்ளது.
தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி என 4 மொழிகளில் உருவாகும் இந்த படத்தை பிரபல தயாரிப்பாளர் ஷிபு தமீம் தயாரிக்க உள்ளார். இந்த படத்தில் சிம்ஹா, ஆர்கே சுரேஷ், முனீஸ்காந்த் உள்பட பலர் நடித்து வருகின்றனர். சாம் சிஎஸ் இசையில் உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
Happy to share you the title look of #Thugs, Best wishes team.@BrindhaGopal1 @hridhuharoon @actorsimha @studio9_suresh #Munishkanth @riyashibu_ #HRPictures @shibuthameens @SamCSmusic @priyesh_3190 @editorpraveen @maliniKarthik_ @kabilanchelliah @Shrutitudi @proyuvraaj pic.twitter.com/3pgdiQbrQ1
— VijaySethupathi (@VijaySethuOffl) June 10, 2022
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com