தென்னாப்பிரிக்கா நட்சத்திர வீரர் திடீர் ஓய்வு… ரசிகர்கள் அதிர்ச்சி!


தென் ஆப்பிரிக்க அணியின் முன்னணி நட்சத்திர வீரராக வலம்வரும் டேல் ஸ்டெய்ன் அனைத்துவிதமான போட்டிகளில் இருந்தும் ஓய்வுப்பெறுவதாக திடீர் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார். இந்த அறிவிப்பை தொடர்ந்து அவரது ரசிகர்கள் கடும் அதிர்ச்சியை வெளியிட்டு வருகின்றனர்.

கடந்த 2005 ஆம் ஆண்டு செஞ்சூரியனில் ஆசியா லெவன் அணிக்கு எதிராக ஆப்பிரிக்கா லெவன் அணிக்காக அறிமுகமானவர் டேல் ஸ்டெய்ன். மேலும் நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 போட்டியில் தனது முத்திரையைப் பதித்து 3 வித போட்டிகளிலும் மிகச்சிறந்த வீரர் மற்றும் மிகச்சிறந்த பவுலர் என்ற பெருமையை தக்கவைத்துக் கொண்டிருந்தார்.

டேல் ஸ்டெய்ன் இதுவரை 93 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 439 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அதேபோல 125 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 196 விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளார். மேலும் 47 டி20 போட்டிகளில் கலந்து கொண்டு விளையாடிய அவர் 64 விக்கெட்டுகளை விழ்த்தி இருந்தார்.

கடந்த 2019 ஆம் ஆண்டு பிப்ரவரியில் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டி20 போட்டியில் விளையாடி இருந்தார். இந்நிலையில் அதுவே அவரது கடைசி சர்வதேசப் போட்டியாக மாறிப்போய் இருக்கிறது. ஏற்கனவே பலமுறை உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட டேல் ஸ்டெய்ன் தற்போது கொரோனா காலத்தில் தன்னுடைய ஓய்வு குறித்து தடாலடி முடிவெடுத்துள்ளார்.

மேலும் இதுகுறித்து பேசிய அவர், “இதுஒரு நீண்ட டிசம்பர் ஆகிவிட்டது. இந்த ஆண்டு கடந்த ஆண்டை விட சிறப்பாக இருக்கும் என்று நம்புவதற்கு காரணம் இருக்கிறது. மேலும் இந்தத் தருணத்தில் இருந்து நான் தப்பித்துச்செல்ல எல்லா முயற்சிகளும் எடுத்தேன். அதுவும் எனது நினைவில் இல்லை“ என்று குறிப்பிட்டு உள்ளார்.

டேல் ஸ்டெய்ன் ஓய்வு பற்றிய தகவல் பற்றிய தற்போது சோஷியல் மீடியாவில் தீயாய் பரவிவருகிறது. மேலும் கிரிக்கெட் ரசிகர்கள் பலரும் அவரது ஓய்வுக்கு அதிர்ச்சியை வெளியிட்டு வருகின்றனர்.