மின் ஊழியர்களுக்கு தினமும் 3 நாள் சம்பளம்: தமிழக அரசு அதிரடி

  • IndiaGlitz, [Wednesday,November 21 2018]

கஜா புயலால் ஏற்பட்ட பாதிப்புகளில் மிகப்பெரியதாக கருதப்படுவது லட்சக்கணக்கான மின் கம்பங்கள், டிரான்ஸ்பர்கள் சாய்ந்ததுதான். இந்த பணிகளை சீரமைப்பது என்பது மின்சார துறைக்கு மிகப்பெரிய சவாலாக உள்ளது.

கஜா புயல் கரையை கடந்து ஒருவாரம் ஆகிவிட்ட நிலையிலும் இன்னும் பல இடங்களின் மின்சாரம் இன்றி இருளில் உள்ளது. இருப்பினும் மின் துறை ஊழியர்கள் இரவுபகலாக மின்கம்பங்களை சீரமைத்து வருகின்றனர். இதனால் டெல்டா பகுதியில் விரைவில் மின் இணைப்பு கொடுக்கப்படும் என கூறப்படுகிறது.

இந்த நிலையில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பணியாற்றும் மின் ஊழியர்களுக்கு நாள் ஒன்றுக்கு 3 நாள் சம்பளம் வழங்கப்படும் என தமிழ்நாடு மின்வாரியம் அதிரடி அறிவிப்பு ஒன்றை செய்துள்ளது. இந்த அறிவிப்பு மின்வாரிய ஊழியர்களுக்கு ஊக்கமளிப்பதாக உள்ளது.

 

More News

கஜா புயல் நிவாரண நிதியாக ரூ.1 கோடி அறிவித்த கேப்டன் விஜயகாந்த்

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு தேமுதிக சார்பில் ஒரு கோடி ரூபாய்க்கு நிவாரணப்பொருட்கள் வழங்கப்படும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார்.

நீண்ட இடைவெளிக்கு பின் மீண்டும் ரீஎண்ட்ரி ஆகும் அமலா

ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜயகாந்த், பிரபு, சத்யராஜ் உள்ளிட்ட பிரபல நடிகர்களுடன் ஜோடியாக நடித்த நடிகை அமலா, பிரபல தெலுங்கு நடிகர் நாகார்ஜூனை திருமணம் செய்து கொண்ட பின் திரையுலகில் இருந்து விலகினார்.

சன்னிலியோன் நடிக்கும் அடுத்த தென்னிந்திய படம்

பிரபல பாலிவுட் கவர்ச்சி நடிகை சன்னிலியோன் தமிழில் தற்போது 'வீரமாதேவி' என்ற படத்தில் நடித்து வருகிறார். இயக்குனர் வடிவுடையான் இயக்கி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

நானே சரித்திரமாக மாறிவிட்டேன்: 'சீதக்காதி' டிரைலர் விமர்சனம்

கோலிவுட் திரையுலகின் வெற்றி நாயகனான விஜய்சேதுபதி நடித்த அடுத்த படமான 'சீதக்காதி' திரைப்படம் வரும் டிசம்பர் 20ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் சற்றுமுன் இந்த படத்தின் டிரைலர் வெளியானது.

கஜா புயல் நிவாரண நிதியாக ரூ.25 லட்சம் கொடுத்த பிரபல நடிகர்

கடந்த வாரம் கஜா புயல் தமிழகத்தின் டெல்டா பகுதிகளை துவம்சம் செய்துவிட்ட நிலையில் அந்த பகுதி மக்களுக்கு ஏற்பட்ட பாதிப்பின் மதிப்பு கணக்கிட முடியாத அளவுக்கு உள்ளது