கொரோனா எதிர்ப்புக்கு மவுத் வாஷ் பயன்படுமா??? விஞ்ஞானிகள் வெளியிட்ட முக்கிய தகவல்!!!
- IndiaGlitz, [Tuesday,October 20 2020]
கொரோனா தடுப்பூசி பற்றிய ஆய்வுகளைத் தவிர விஞ்ஞானிகள் அதன் வீரியத்தைக் கட்டுப்படுத்தும் வகையிலும் பல்வேறு ஆய்வுகளை நடத்தி வருகின்றனர். அந்த வகையில் நாம் அன்றாடம் பயன்படுத்தும் மவுத் வாஷ் கொரோனாவின் அளவைக் கட்டுப்படுத்த உதவும் என்ற தகவலை விஞ்ஞானிகள் தற்போது வெளியிட்டு உள்ளனர். அதிலும் முக்கியமாக கொரோனா வைரஸின் பாதிப்பில் இருந்து மீண்டவர்களுக்கு இந்த கிருமிநாசினி தன்மைக் கொண்ட மவுத் வாஷ்கள் மிகவும் பயன்படும் எனவும் அவர்கள் குறிப்பிட்டு உள்ளனர்.
இதுதொடர்பாக தொற்று நோய்க்கு பிறகு வாயில் உருவாகும் வைரஸின் அளவைக் குறைக்க இந்த தயாரிப்புகள் உதவும் எனவும் Covid-2 வைரஸை ஏற்படுத்தும் கொரோனா வைரஸ்களை செயலிழக்கச் செய்யும் திறனை மவுத் வாஷ்கள் கொண்டு இருக்கின்றன எனவும் மருத்துவ வைரலாஜி ஜர்னலில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
அமெரிக்காவின் பென் மாநில பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த ஆய்வு ஆராய்ச்சியாளரான கிரேக் மேயர்ஸ் கூறும்போது ஒரு தடுப்பூசியைத் தயாரிப்பதற்கு முன்பு அந்த வைரஸைக் கட்டுப்படுத்தும் வகையில் சில வழிமறைகளைக் கண்டுபிடிக்க வேண்டும். அந்த வகையில் மார்க்கெட்டில் இயல்பாக கிடைக்கும் மவுத் வாஷ்களைக் குறித்து ஆய்வு நடத்தினோம். அந்த ஆய்வில் மவுத் வாஷ்கள் போன்ற நாசோபார்னீஜியல் அல்லது வாய்க் கொப்பளிப்பான்கள் மனிதனுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் கொரோனா வைரஸை செயலிழக்கச் செய்யும் திறன் கொண்டது என்து கண்டுபிடிக்கப் பட்டுள்ளது எனத் தெரிவித்தார்.
மேலும் இந்த மவுத் வாஷ் வகைகளில் குழந்தைகளுக்கு பயன்படுத்தும் ஷாம்பு, பெராக்சைடு புண்-வாய் சுத்தப்படுத்திகள் மற்றும் மவுத் வாஷ்கள் போன்றவையும் அடங்கும். பொதுவாக மவுத் வாஷ்கள் மூக்கு மற்றும் வாய் வழியாகப் பரவும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதில் பெரும் பங்கு ஆற்றுகின்றன என்பதையும் இந்த விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளனர். மேலும் கொரோனா தொற்றுக்கு ஏற்கனவே ஆளான நபர்களால் மற்றவர்களுக்கு பரவும் அளவும் இந்த மவுத் வாஷ்களைப் பயன்படுத்தும்போது குறையும் எனவும் கணிக்கப் பட்டுள்ளது.