இந்திக்கு செல்கிறது விஜய்யின் 'டாடி மம்மி''

  • IndiaGlitz, [Tuesday,August 25 2015]

இயக்குனர் பிரபுதேவா இயக்கத்தில் கடந்த 2009ஆம் ஆண்டு வெளிவந்த படம் 'வில்லு'. இளையதளபதி விஜய், நயன்தாரா, பிரகாஷ்ராஜ் மற்றும் பலர் நடித்த இந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை என்றாலும், இந்த படத்தில் இடம்பெற்ற பாடல்கள் சூப்பர் ஹிட் ஆகியது. குறிப்பாக 'டாடி மம்மி வீட்டில் இல்லை' என்ற பாடல் இன்றளவும் ரசிகர்களின் விருப்பத்திற்குரிய பாடலாக உள்ளது.

தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்த இந்த பாடலின் டியூன் தற்போது இந்தி படம் ஒன்றுக்காக பயன்படுத்தப்படவுள்ளது. இந்தியில் தற்போது தயாராகி வரும் 'பாக் ஜானி' என்ற படத்தில் டாடி மம்மி பாடல் இந்தி வடிவமாக உள்ளதாகவும், இந்த பாடலை தேவிஸ்ரீ பிரசாத்தே பாடவுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது. இந்த பாடலில் தேவிஸ்ரீ பிரசாத்துடன் இணைந்து பாடவுள்ளவர் மம்தா மோகன் தாஸ். இவர் அருண்விஜய் நடித்த 'தடையற தாக்க' படத்தின் ஹீரோயின் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இவர் ஏற்கனவே தேவிஸ்ரீ பிரசாத்துடன் இணைந்து சிரஞ்சிவி நடித்த 'சங்கர்தாதா ஜிந்தாபாத்' என்ற படத்தில் ஒரு பாடலை பாடியுள்ளார். அந்த பாடலும் 'டாடி மம்மி பாடலின் தெலுங்கு வடிவம் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ், தெலுங்கு என இருமொழிகளிலும் பெரிய ஸ்டார்களின் படங்களுக்கு இசையமைத்து வரும் தேவிஸ்ரீ பிரசாத் இந்த பாடல் இந்தியில் வெற்றி அடைந்தால் விரைவில் பாலிவுட்டுக்கும் சென்று கலக்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.