close
Choose your channels

கமல்ஹாசனின் 'விஸ்வரூபம் 2' பட நடிகைக்கு தாதா சாகேப் பால்கே விருது.. குவியும் வாழ்த்துக்கள்..!

Tuesday, September 26, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

உலகநாயகன் கமல்ஹாசன் நடித்த ‘விஸ்வரூபம் 2’ படம் உட்பட ஏராளமான படங்களில் நடித்த நடிகைக்கு தாதா சாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

பழம்பெரும் நடிகையான வஹிதா ரஹ்மான் என்பவருக்கு சற்றுமுன் தாதா சாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

எம்.ஜி.ஆர் நடிப்பில் உருவான ’அலிபாபாவும் 40 திருடர்களும்’ என்ற திரைப்படத்தில் ’சலாம் பாபு, சலாம் பாபு, என்னை பாருங்க’ என்ற பாடலுக்கு அவர் டான்ஸ் ஆடியுள்ளார். மேலும் இவர் ஏராளமான ஹிந்தி படங்களில் நடித்துள்ளார் என்பதும் பெரும்பாலும் ஒரு பாடலுக்கு நடனமாடி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே கடந்த 1971 ஆம் ஆண்டு வெளியான ’ரேஷ்மா அவுர் ஷேரா’ என்ற திரைப்படத்தில் சிறப்பாக நடித்ததற்காக இவருக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

ஏராளமான இந்தி படங்களிலும் தெலுங்கு திரைப்படங்களில் நடித்த நடிகை வஹிதா ரஹ்மான், கடைசியாக கமல்ஹாசன் நடித்த ‘விஸ்வரூபம் 2’ திரைப்படத்தில் கமல்ஹாசன் அம்மா வேடத்தில் நடித்திருந்தார்.

தற்போது 85 வயதாகும் வஹிதா ரஹ்மானுக்கு தாதா சாகேப் பால்கே விருது கிடைத்துள்ள நிலையில் அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment