'டாடா' தயாரிப்பாளரின் அடுத்த படத்தில் அதர்வா? இயக்குனர் இந்த பிரபலமா?

  • IndiaGlitz, [Wednesday,October 11 2023]

கவின் நடித்த ’டாடா’ என்ற வெற்றி படத்தை தயாரித்த ஒலிம்பியா மூவிஸ் நிறுவனம் தயாரிக்கும் அடுத்த திரைப்படத்தில் அதர்வா நடிக்க இருப்பதாகவும் இந்த படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

கவின் நடித்த ’டாடா’ திரைப்படம் அவருக்கு மிகப்பெரிய திருப்புமுனையை கொடுத்தது என்பதும் இந்த படத்தின் வெற்றி காரணமாக தற்போது அவர் ஒரே நேரத்தில் மூன்று படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கவினுக்கு திரையுலக வாழ்வில் திருப்புமுனையை கொடுத்த ஒலிம்பியா பிக்சர்ஸ் நிறுவனம் தற்போது அடுத்ததாக அதர்வா நடிக்கும் படத்தை தயாரிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த படத்தை நெல்சன் வெங்கடேசன் இயக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளன. இவர் ஏற்கனவே ’ஒரு நாள் கூத்து’ ’மான்ஸ்டர்’ மற்றும் ’பர்ஹானா’ உள்ளிட்ட திரைப் படங்களை இயக்கி உள்ளார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு நாளை முதல் தொடங்க இருப்பதாகவும் இந்த படத்தில் நடிக்கும் நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்பு நாளை வெளியாக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

நடிகர் அதர்வா ஏற்கனவே ’நிறங்கள் மூன்று’ உள்பட 3 திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

'லியோ' டிரைலரில் இருந்த கெட்ட வார்த்தை. அதிரடி முடிவெடுத்த படக்குழு..!

தளபதி விஜய் நடித்த 'லியோ' திரைப்படத்தின் டிரைலர் கடந்த சில நாட்களுக்கு முன்னாள் வெளியான நிலையில் அந்த ட்ரெய்லரில் இருந்த ஒரு கெட்ட வார்த்தை குறித்து பெரும் சர்ச்சை சமூக ஊடகங்களில் இருந்தது.

'லியோ' டான்சர்கள் சம்பள பாக்கி விவகாரம்: பெப்சி தலைவர் ஆர் கே செல்வமணி அறிக்கை..!

தளபதி விஜய் நடித்த 'லியோ' திரைப்படம் வரும் 19ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தில் இடம்பெற்ற ஒரு பாடலில் நடித்த டான்ஸர்கள் சிலர் தங்களுக்கு சம்பளம் வரவில்லை

ஜிவி பிரகாஷின் 25வது படம்.. கமல்ஹாசன் வெளியிட்ட டைட்டில் போஸ்டர்..!

ஜிவி பிரகாஷ் நடிக்க இருக்கும் 25 வது திரைப்படம் குறித்த தகவல் கடந்த சில நாட்களாக வெளிவந்து கொண்டிருந்த நிலையில் சற்றுமுன் இந்த படத்தின் டைட்டில் போஸ்டரை உலகநாயகன் கமல்ஹாசன்

'லியோ' படத்தில் த்ரிஷாவுக்கு பாடல் இருக்குதா? 3வது சிங்கிள் அறிவிப்பு..!

 தளபதி விஜய் நடித்த 'லியோ' திரைப்படத்தில் இரண்டு பாடல்கள் மட்டுமே உள்ளதாக ஏற்கனவே செய்தி வெளியான நிலையில் இரண்டு பாடல்களும் வெளியாகி இணையத்தை ஸ்தம்பிக்க வைத்தது என்பதை பார்த்தோம்.

விக்ரம்' 'கைதி' போலவே 'லியோ'விலும் ரெண்டு பாடல்.. வேற லெவல் தகவல்..!

பழைய திரைப்படங்களின் பாடல்களை புதிய படங்களில் காட்சிகளுக்கு ஏற்ப பயன்படுத்துவது தற்போதைய இளைய தலைமுறை இயக்குனர்களின் டிரெண்டாக உள்ளது. அ