'டாடா' இயக்குனரின் அடுத்த படத்தில் ஹீரோ, ஹீரோயின் யார்? ஆச்சரிய தகவல்..!

  • IndiaGlitz, [Saturday,January 13 2024]

கவின் மற்றும் அபர்ணா தாஸ் நடித்த ’டாடா’ திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது மட்டுமின்றி வசூலிலும் சாதனை செய்தது. இதுவரை வெளியான கவின் படங்களில் ’டாடா’ படம் தான் அதிக வசூல் செய்த படமாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ’டாடா’ படத்தை இயக்கிய இயக்குனர் கணேஷ் பாபு இயக்கும் அடுத்த படம் குறித்த தகவல் சமீபத்தில் வெளியான நிலையில் தற்போது இந்த படத்தின் ஹீரோ ஹீரோயின் யார் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது

கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்த படத்தில் துருவ் விக்ரம் நடிப்பதாக கூறப்பட்ட நிலையில் தற்போது வந்துள்ள தகவல் படி இந்த படத்தில் ஜீவா நடிக்க இருப்பதாக தெரிகிறது. இது ஒரு ரொமான்ஸ் காமெடி திரைப்படம் என்றும் இந்த படத்தின் நாயகி ஆக டாடி ஜிவால் என்பவர் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இவர் ஒரு சில மியூசிக் வீடியோக்களில் நடித்துள்ளார் என்றும் கூறப்படுகிறது.

இந்த படத்தில் ஜீவா மற்றும் டாடி ஜிவால் நடிக்க இருக்கும் தகவல் விரைவில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

அனிருத்துக்கு கிடைத்த முதல் வாய்ப்பு.. பட்டைய கிளப்புவாரா?

இசையமைப்பாளர் அனிருத்,  தமிழ், தெலுங்கு,  ஹிந்தி ஆகிய இந்திய மொழிகளில் இசையமைத்துள்ள நிலையில் முதல் முதலாக அவருக்கு மலையாள திரைப்படத்தில் இசையமைக்க வாய்ப்பு கிடைத்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

The Greatest Of All Time: போட்டோ தானே பார்த்து இருப்பீங்க.. இதோ வீடியோவே வந்துருச்சு..!

தளபதி விஜய் நடித்து வரும் 'G.O.A.T.' திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் சமீபத்தில் தனியார் ஸ்டுடியோ ஒன்றில் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்த நிலையில்

மீண்டும் தள்ளிப்போகிறதா 'தங்கலான்' ரிலீஸ்.. புதிய தேதி என்ன?

பா ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்த 'தங்கலான்' திரைப்படம் பொங்கல் விருந்தாக வெளியாகும் என முதலில் கூறப்பட்டது. ஆனால் அதன் பின்னர் இந்த படத்தின் கிராபிக்ஸ் பணிகள் முடிவடையாததால் ஜனவரி 26 ஆம் தேதி

கண்ணீருடன் விடை பெற்ற போட்டியாளர்கள்.. பூர்ணிமாவை கட்டியணைத்த விஷ்ணு.. நெகிழ்ச்சி காட்சிகள்..!

பிக் பாஸ் சீசன் 7 நாளையுடன் முடிவடைய இருக்கும் நிலையில் இந்த வாரம் எலிமினேஷன் ஆன போட்டியாளர்கள் ஒவ்வொருவராக சிறப்பு விருந்தினராக வீட்டிற்கு வந்தார்கள் என்பதை பார்த்தோம்.

பிக்பாஸ் வீட்டில் அருண்ராஜா காமராஜ்.. மாயாவின் குரூப்பிஸத்தை மறைமுகமாக குத்தி காட்டினாரா?

பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி நாளையுடன் முடிவடைய இருக்கும் நிலையில் நேற்று சிறப்பு விருந்தினராக இயக்குனர் அருண்ராஜா காமராஜ் பிக் பாஸ் வீட்டிற்கு சென்றார். தன்னுடைய இயக்கத்தில்