'டாடா' இயக்குனரின் அடுத்த படத்தில் இந்த பிரபல நடிகரா? தயாரிப்பது யார்?

  • IndiaGlitz, [Wednesday,June 19 2024]

கவின் நடித்த 'டாடா’ என்ற திரைப்படம் கடந்த ஆண்டு வெளியானது என்பதும் வெறும் 4 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட இந்த படம் 20 கோடிக்கு அதிகமாக வசூல் செய்து சாதனை செய்தது என்பதும் தெரிந்தது.

இந்த நிலையில் இந்த படத்தை இயக்கிய கணேஷ் பாபு, லைகா நிறுவனத்திற்கு ஒரு படம் இயக்க இருப்பதாக கூறப்படும் நிலையில் தற்போது அந்த படம் டிராப் என்று கூறப்படுகிறது. இதனை அடுத்து கணேஷ் பாபு இயக்கும் அடுத்த படத்தை ஸ்கிரீன்சீன் நிறுவனம் தயாரிக்க இருப்பதாக செய்திகள் கசிந்து உள்ளது.

இந்நிறுவனம் ஏற்கனவே ஜெயம் ரவி நடித்துள்ள ’பிரதர்’ என்ற படத்தை தயாரித்து உள்ள நிலையில் மீண்டும் ஜெயம் ரவி நடிப்பில் கணேஷ் பாபு இயக்கத்தில் உருவாகும் ஒரு படத்தை தயாரிக்க இருப்பதாகவும் இதற்கான ஆரம்பகட்ட பணிகள் தொடங்கி விட்டதாகவும் கூறப்படுகிறது.

எனவே கணேஷ்பாபு, ஜெயம் ரவி, ஸ்கிரீன் சீன் இணையும் இந்த படம் டாடா போலவே வித்தியாசமான கதையம்சம் கொண்டது என்றும் இந்த படத்தின் கதையை கேட்டதுமே ஜெயம் ரவி நடிக்க ஒப்புக்கொண்டதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் ஜெயம் ரவி நடித்த ‘ஜெனி’, ‘காதலிக்க நேரமில்லை’ மற்றும் ‘பிரதமர்’ ஆகிய படங்களும் ரிலீசுக்கு தயாராகிவிட்டதாகவும், அடுத்தடுத்து இந்த படங்கள் ரிலீஸ் ஆகும் என்றும் கூறப்படுகிறது.

More News

படப்பிடிப்பு தொடங்கிய மறுநாளே சூப்பர் ஸ்டில் வெளியிட்ட ஏஆர் முருகதாஸ்.. 'சிக்கந்தர்' அப்டேட்..!

பிரபல இயக்குனர் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில், பிரபல பாலிவுட் நடிகர் சல்மான்கான் நடிப்பில் உருவாகும் 'சிக்கந்தர்' படத்தின் அறிவிப்பு கடந்த சில நாட்களுக்கு முன் வெளியான நிலையில்

'கல்கி 2898 ஏடி' படத்தின் ரன்னிங் டைம் இவ்வளவா? ரசிகர்கள் பொறுமை காப்பார்களா?

பிரபாஸ் நடித்த 'கல்கி 2898 ஏடி' படம் வரும் 27ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் ரன்னிங் டைம் மற்றும் சென்சார் சான்றிதழ் குறித்த தகவல் இணையத்தில் கசிந்துள்ளது.

சினிமா போதும்? திடீரென கிரிக்கெட்டில் களமிறங்கிய அஜித்.. யாருடன் விளையாடினார் தெரியுமா?

நடிகர் அஜித் தற்போது ஒரே நேரத்தில் 'விடாமுயற்சி' மற்றும் 'குட் பேட் அக்லி' ஆகிய இரண்டு படங்களில் நடித்து வரும் நிலையில் திடீரென அவர் கிரிக்கெட் விளையாடும் புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

'மகாராஜா' வெற்றிக்கு பின் பாதையை மாற்றிய விஜய் சேதுபதி.. தரமான இயக்குனருடன் கூட்டணி..!

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்த 50வது திரைப்படமான 'மகாராஜா' திரைப்படம் கடந்த வாரம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது என்பதும் இந்த படம் இதுவரை 40 கோடிக்கும் அதிகமாக

8 வருடத்திற்கு முன் எப்படி இருந்திங்க.. இப்ப எப்படி இருக்கீங்க.. கீர்த்தி சுரேஷின் எமோஷனல் பதிவு..!

நடிகை கீர்த்தி சுரேஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எட்டு வருடங்களுக்கு முன் உங்களை நான் பார்த்ததற்கும் இப்போது பார்ப்பதற்கும் அதிக வித்தியாசம் இருக்கிறது