'டாடா' இயக்குனரின் அடுத்த படத்தில் இந்த பிரபல நடிகரா? தயாரிப்பது யார்?

  • IndiaGlitz, [Wednesday,June 19 2024]

கவின் நடித்த 'டாடா’ என்ற திரைப்படம் கடந்த ஆண்டு வெளியானது என்பதும் வெறும் 4 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட இந்த படம் 20 கோடிக்கு அதிகமாக வசூல் செய்து சாதனை செய்தது என்பதும் தெரிந்தது.

இந்த நிலையில் இந்த படத்தை இயக்கிய கணேஷ் பாபு, லைகா நிறுவனத்திற்கு ஒரு படம் இயக்க இருப்பதாக கூறப்படும் நிலையில் தற்போது அந்த படம் டிராப் என்று கூறப்படுகிறது. இதனை அடுத்து கணேஷ் பாபு இயக்கும் அடுத்த படத்தை ஸ்கிரீன்சீன் நிறுவனம் தயாரிக்க இருப்பதாக செய்திகள் கசிந்து உள்ளது.

இந்நிறுவனம் ஏற்கனவே ஜெயம் ரவி நடித்துள்ள ’பிரதர்’ என்ற படத்தை தயாரித்து உள்ள நிலையில் மீண்டும் ஜெயம் ரவி நடிப்பில் கணேஷ் பாபு இயக்கத்தில் உருவாகும் ஒரு படத்தை தயாரிக்க இருப்பதாகவும் இதற்கான ஆரம்பகட்ட பணிகள் தொடங்கி விட்டதாகவும் கூறப்படுகிறது.

எனவே கணேஷ்பாபு, ஜெயம் ரவி, ஸ்கிரீன் சீன் இணையும் இந்த படம் டாடா போலவே வித்தியாசமான கதையம்சம் கொண்டது என்றும் இந்த படத்தின் கதையை கேட்டதுமே ஜெயம் ரவி நடிக்க ஒப்புக்கொண்டதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் ஜெயம் ரவி நடித்த ‘ஜெனி’, ‘காதலிக்க நேரமில்லை’ மற்றும் ‘பிரதமர்’ ஆகிய படங்களும் ரிலீசுக்கு தயாராகிவிட்டதாகவும், அடுத்தடுத்து இந்த படங்கள் ரிலீஸ் ஆகும் என்றும் கூறப்படுகிறது.